தெலுங்கில்
ராம்சரன்தேஜா, அல்லு அர்ஜூன் மற்றும் இந்தியில் ஜான் ஆபிரஹாம், அக்ஷய்
குமார் என முன்னணி ஹீரோக்களுடன் 4 மிகப்பெரிய ஹீரோக்களுடன் கமிட்
ஆகியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தெலுங்கு, இந்தி என இருமொழியிலும்
வெளியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் D-Day திரைப்படத்தில்
ஸ்ருதிஹாசன் துணிவாக ஏற்று நடித்த கதாபாத்திரம் பாலிவுட்டில் அவரது
மார்கெட்டை உயர்த்தியது
சிகப்பு
விளக்குப் பகுதியில் பணிபுரியும் பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்து பலரது
பாராட்டுக்களையும் பெற்றதுடன், திரையுலகினரின் கவனத்தையும்
ஈர்த்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான D-Day திரைப்படத்தை ‘தாவூத்’ என்கிற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட முயற்சி நடந்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ருதிஹாசன் “உங்களது ஆதரவிற்கு நன் நன்றி. நான் நடித்த D-Day திரைப்படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியாவதற்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. என் அனுமதி இல்லாமல் இந்த முயற்சி நடந்திருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இதுபற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

தனக்கு
நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படத்தின் மீதே ஸ்ருதிஹாசன் வழக்குத்
தொடுக்கப்போவதாக கூறியுள்ளது இந்தி திரையுலகத்தில் பரபரப்பை
ஏற்படுட்த்தியுள்ளது.cinema.nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக