திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை டெல்லி துக்ளக் லேனில் உள்ள தனது இல்லத்துக்கு புதன்கிழமை வரவழைத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து திருமாவளவன், ‘’ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தொடரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த மசோதா; எஸ்சிஎஸ்பி எனப்படும் தாழ்த்தப்பட்டோர் நலன்கள் தொடர்புடைய துணைத் திட்டம், டிஎஸ்பி எனப்படும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்;
தனியார் துறை வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு, இந்திய ஆழ்கடல் பகுதியிலேயே தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வகை செய்யும் படகுகள், மீன் பிடி வலைகளை மத்திய அரசே வழங்க வேண்டும்; தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்களில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்;
ஜெனீவாவில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்த வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற ஆதரவு தரும்படி ராகுலிடம் மனு அளித்தேன்’’ என்று கூறியு nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக