தங்கசாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதை ஆகியவற்றை திறக்க கோரி தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சேகர்பாபு, ஆர்.டி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:–
வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 23 கோடி செலவில் தங்கசாலை மேம்பாலம் கட்ட 2009–ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் ரூ. 15.76 கோடியில் ஸ்டான்லி சுரங்கப்பாதை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறப்பதற்கு மாநகராட்சியும், அரசும் காலம் தாழ்த்தி வருகிறது.
தங்கசாலை மேம்பாலம் 100 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டப்பட்டது. இதை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.
இதே போல் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொருக்குப்பேட்டை, மூலக்கடை, வியாசர்பாடி, திருமங்கலம் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதை விரைவு படுத்த வேண்டும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் 21 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு 12 இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டி முடிக்கப்பட்டன. தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று 2½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆய்வுப் பணிகள்தான் நடப்பதாக கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் போஸ், வடசென்னை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.டி. பாண்டிசெல்வம் பிரபாகர் ராஜா, புழல் நாராயணன், கவிதா நாரயாணன், பிரசி டென்சி ராஜா, தேவ ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர். .maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக