சனி, 8 பிப்ரவரி, 2014

வடுவூர் சரணாலயத்திற்கு 24,000 பறவைகள் வருகை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மூலிகை ஆராய்ச்சித்துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் 15 மாணவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் நாமக்கோழி, ஊசிவால் நாத்து, அரிவாள் மூக்கன், கூலக்கடா, ஜக்கானா, முக்குளிப்பான், பெரிய நீர் காகம், உன்னி கொக்கு, வக்கான் உள்பட 24 வகை வெளிநாட்டு பறவைகள் 24 ஆயிரத்திற்கும் அதிகமாக சரணாலயத்திற்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு 11 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகள்தான் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தற்போது பறவைகள் வருகை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் இருப்புதான்.
இந்தாண்டு ஏரியில் சுமார் 2 அடி தண்ணீர் உள்ளது. ஏரியில் தண்ணீர் இருக்கின்ற வரை பறவைகளும் இருக்கும் என பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் வடுவூர் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் படி செய்வதற்கு ஏரியின் முகத்துவாரத்தில் தடுப்பணை ஏற்படுத்தி தண்ணீரை ஆண்டு முழுவதும் தேக்கி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் கோடை காலத்திலும் வெளிநாட்டு பறவைகள் சென்று விடாமல் இங்கேயே தங்கி விடும் சூழல் உள்ளதால் தடுப்பணை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து உதயமா£த்தாண்டபுரம் சரணாலயத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: