புதுவை
மாநில தி.மு.க. சார்பில் திருச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் கடலூர்
சாலை சிங்காரவேலர் சிலை அருகில் நடந்தது. புதுவை மாநில அமைப்பாளர் டாக்டர்
எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன்
வரவேற்றார்.
கூட்டத்தில்
முன்னாள் மத்திய மந்திரி ராசா பேசியபோது, ‘’தமிழர்கள் அனைவரையும் ஒரே
குடையின் கீழ் கொண்டு வரப்பட்ட இயக்கம் தி.மு.க. இனம், மொழியை காக்கும்
தமிழின தலைவர் கலைஞர்தான்.புதுவையில்
தி.மு.க. ஆட்சி செய்து 14 ஆண்டுகள் ஆகிறது. ராமர் 14 ஆண்டுகள் காட்டுக்கு
சென்று திரும்பியது போல் புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும். ஒரே
நேரத்தில் தமிழகம்–புதுவையில் தி.மு.க. ஆட்சி வர உள்ளது.
இந்திய
அரசியல் எங்கே செல்கிறது என்பதற்காகத் தான் திருச்சி மாநாடு. வருகிற
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 2 கட்சிகளுடனும் கூட்டணி
இல்லை. தி.மு.க. தனித்தே போட்டியிடும்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எல்லை தெரியாது. ஆனால் புதுவையில் கடல் எல்லையை ஒரு முறை தாண்டினால் ரூ.5 ஆயிரம், 2–வது முறை தாண்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எல்லை தெரியாது. ஆனால் புதுவையில் கடல் எல்லையை ஒரு முறை தாண்டினால் ரூ.5 ஆயிரம், 2–வது முறை தாண்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
3–வது
முறை கடல் எல்லையை தாண்டினால் மீன் பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என்று
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது நியாயமா? தேர்தலில் அறிவித்த
வாக்குறுதிகளை புதுவை அரசு நிறைவேற்ற வில்லை’’என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக