இஷ்ரத் ஜெகான் என்கவுன்டர் வழக்கில், சிபிஐ தாக்கல் செய்துள்ள 2-வது
குற்றப்பத்திரிகையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயர்
இடம்பெறவில்லை.
கடந்த 2004-ஆம் ஆண்டு, குஜராத் இளம் பெண் இஷ்ரத் ஜெகான் உள்ளிட்ட 4 பேர்
தீவிரவாதிகள் என கூறி போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது போலி என்கவுன்டர் என பின்னர் கூறப்பட்டது, வழக்கில் திருப்பத்தை
ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இன்று சிபிஐ 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரஜிந்தர் குமார் மற்றும் அதிகாரிகள்
பி. மிட்டல், எம்.கே. சின்ஹா, ராஜிவ் வான்கடே ஆகியோரின் பெயர்கள்
இடம்பெற்றுள்ளன.
அவர்கள் மீது பிரிவு 120(பி) கீழ் கொலை, ஆள்கடத்தல், ஆயுதங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராஜிந்தர் குமார் ஆயுதங்களை வழங்கிய, முக்கிய குற்றவாளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ, தனது 2-வது குற்றப்பத்திரிகையில் அமித் ஷாவின் பெயரை மட்டும்
சேர்க்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா மோடியின் நெருங்கிய
நண்பர் ஆவார். போலி என்கவுண்டர் வழக்கில் மோடியின் நண்பர் தப்பிவிட்டார் tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக