வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ஆண்கள் அடித்தால் சட்டப்படி அது குற்றம் இல்லை ! ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்


ஆப்கானிஸ்தானில் மனைவியை கணவன் அடித்தல் அது குற்றம் இல்லை என்று கூறும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாம். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதையும் மீறி யாராவது சாதிக்க நினைத்தால் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் ஆண்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரிகளை அடித்தால் அது குற்றமாகாது என்ற ஒரு சட்ட திருத்தம் ஆப்கானிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் தற்போது ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு மட்டும் ஒப்புதல் கிடைத்துவிட்டால் பெண்கள் தங்களை கணவர் தாக்கியதாக புகார் கொடுத்தாலும் அதனால் பலனில்லை. எனவே பெண்கள் அடித்தால் அடியை வாங்கிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். முன்னதாக பெண்களுக்கு எதிரான கொடுமையை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி குழந்தை திருமணம், பிரச்சனைகளை தீர்க்க பெண்களை விற்பது, வாங்குவது, அடித்து துன்புறுத்துவது, கொடுமை படுத்துவது ஆகியவை குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: