திங்கள், 3 பிப்ரவரி, 2014

தண்ணீர் கிடைக்காத மக்கள் ஆம் ஆத்மி எம்எல்ஏ கன்னத்தில் பளார்

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார். மீட்டர் வசதியுடன் குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தார். அதற்கு மேல் உபயோகப்படுத்தினால் மொத்த தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. டெல்லியில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பே இல்லை. அரசு அறிவிப்பால் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பலன் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கம் விகார் பகுதி எம்எல்ஏ தினேஷ் மொகானியா நேற்று தனது தொகுதியில் மக்களிடம் குறை கேட்க சென்றார். இந்த தொகுதியில் பல இடங்களில் மக்களுக்கு இலவச தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த பொது மக்கள், எம்எல்ஏவை வறுத்து எடுத்தனர். ஒரு பெண், எம்எல்ஏவின் கன்னத்தில் திடீரென அறைந்தார். அருகில் இருந்தவர்கள் எம்எல்ஏவை அங்கிருந்து உடனடியாக அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..dinakaran.com

கருத்துகள் இல்லை: