செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

1984ல் சீக்கியர் படுகொலை ! ஜனாதிபதி ஜெயில்சிங் கோரிய உதவியை ராஜிவ் நிராகரித்தார்

டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையின் போது தமது தந்தை உதவி கோரியதை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியும் அவரது அரசும் புறக்கணித்துவிட்டது என்று அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்கின் மகள் குர்தீப் கவுர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியில், 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க ராஜிவ் காந்தி அரசு முயற்சித்தது என்று கூறியிருந்தார். அத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கும் இந்த படுகொலையில் தொடர்பிருப்பது உண்மைதான் என்றும் ராகுல் கூறியிருந்தார். இது சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர் படுகொலையில் ஈடுபட்ட காங்கிரசார் பெயரை வெளியிடக் கோரி ராகுல் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்கின் ஊடக செயலரும், ராஜிவ் அரசு சீக்கியர் படுகொலையை தடுக்க தவறியது.  
ஜெயில்சிங் தொடர்பு கொண்ட போது அவரை நிராகரித்தது என்று தெரிவித்திருந்தார்.
தற்போது ஜெயில்சிங்கின் மகள் டாக்டர் குர்தீப் கவுரும் அப்போது ஜெயில்சிங் மேற்கொண்ட நடவடிக்கைகள், ராஜிவ் அரசு எப்படியெல்லாம் புறக்கணித்தது என்பதை விவரித்துள்ளார். இது தொடர்பாக குர்தீப் கவுர் கூறியுள்ளதாவது:
நாட்டின் முப்படை தளபதியான ஜனாதிபதி பொறுப்பில் எனது தந்தை ஜெயில்சிங் இருந்தார். ஆனாலும் பஞ்சாப் பொற்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட ஆபரசேன ப்ளூ ஸ்டார் பற்றி அவரிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை.
ஆபரேசன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால் அவர் உறைந்துபோனார்.. அவர் கண்களில் கண்ணீரை அது வரவழைத்தது.. அந்த நடவடிக்கையின் பின்னர் 4 நாட்கள் கழித்து பொற்கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். அந்த புனிதத் தலம் உருக்குலைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இரவு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அப்போது பிரதமர் அலுவலகத்தையும் உள்துறை அமைச்சகத்தையும் அவர் தொடர்பு கொண்டு பார்த்தார். அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டார்
அவர் தொடர்பு கொண்ட தொலைபேசிகள் எடுக்கப்படவில்லை.. சில துண்டிக்கப்பட்டிருந்தன. அதனால் இந்த நாட்டின் சக்தி வாய்ந்த மனிதரான ஜனாதிபதி கையறு நிலைக்குப் போனார்.. சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த இரவுகளில் அவர் உறங்காவில்லை.. தமது சொந்த முயற்சியில் பாதுகாவலர்களை அனுப்பி சீக்கியர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அந்த வன்முறை நிகழ்ந்த முதல் 48 மணி முதல் 72 மணி நேரம் நாட்டின் பிரதமரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ ஜனாதிபதி மாளிகை பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை
அப்போது அவரை பதவி விலகுமாறு சில சீக்கியர் அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால் அப்படி தான் செய்தால் சீக்கியர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து தாக்குதல் பரவும் என அஞ்சினார் ஜெயில்சிங்.
அப்படி அன்று ஜெயில்சிங் செய்ததாலேயே இன்று நாட்டின் பிரதமர் பதவியிலும் ராணுவ தளபதி பொறுப்புகளிலும் சீக்கியர்கள் அமர முடிகிறது. இவ்வாறு குர்தீப் கவுர் தெரிவித்துள் 

கருத்துகள் இல்லை: