தர்மபுரி:"இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை' என,
அவரது காதல் மனைவி திவ்யா, கலெக்டருக்கு, மனு கொடுத்திருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.கடந்த, 4ம் தேதி, இளவரசன், தர்மபுரி அரசு கலைக்
கல்லூரி பின்புறம் உள்ள, ரயில் தண்டவாளத்தில், பிணமாக கிடந்தார். பிரேத
பரிசோதனை அறிக்கை மற்றும் இளவரசன், "என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என,
எழுதிய கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில், இளவரசன் தற்கொலை செய்து
கொண்டார் என, போலீசார் அறிவித்தனர்.இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது
உறவினர்கள், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர். "இளவரசனின்
இறுதிச் சடங்கில், திவ்யா கலந்து கொள்ளலாம்' என, இளவரசனின் தந்தை, இளங்கோ
கூறியிருந்தார்.திவ்வியாவின் முடிவு புத்திசாலிதனமாக உள்ளது. தந்தையை போன்றும் புருஷனை போன்றும் திவ்யா ஒரு முட்டாள் அல்ல என்று நிருபித்து உள்ளார்
இதற்கிடையில், சி.பி.ஐ., விசாரணை கோரியும், சென்னை அழைத்து வந்து, திவ்யாவுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்றும், தாக்கல் செய்த மனு, கடந்த, 8ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்' நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர், "இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா குடும்பத்தினர் கலந்து கொள்ள விரும்பினால், கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.கடந்த, 9ம் தேதி, இது குறித்து விளக்கம் கேட்டு, நீதிமன்ற உத்தரவை, வி.ஏ.ஓ., செல்வராஜ், இளவரசனின் தந்தை, இளங்கோவிடம் வழங்கினார். அதே நாளில், தாசில்தார் விஜயா, செல்லன்கொட்டாயில் உள்ள, திவ்யாவிடம், நேரடியாக வழங்கினார்.
நேற்று முன்தினம் திவ்யா, சீல் வைக்கப்பட்ட ஒரு மனுவை, தன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, போலீஸ் அதிகாரி மூலம், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனுக்கு அனுப்பி வைத்தார். அந்த மனு குறித்த விவரங்களை, அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர்.இது குறித்து, வருவாய் துறை வட்டாரங்களில் கூறும் போது, "திவ்யா, இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விரும்பவில்லை' என, மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.
திவ்யா அனுப்பிய மனுவை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திவ்யா கடந்த, 6ம் தேதி, செல்லன்கொட்டாய் வந்தார். மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் கவுன்சலிங் கொடுத்தனர். இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், இளவரசன் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றை, பத்திரிகை மூலம் அறிந்து கொள்ளும் திவ்யா, இளவரசனின் இறப்பு சோகத்தில் இருந்து மீளவில்லை என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இளவரசன் எழுதிய கடிதம் குறித்து, மிகவும் வேதனை அடைந்த திவ்யா, இளவரசனின் முடிவு அவசரமானது என, கூறி வருகிறார். ஆனால், வெளிப்படையாக எந்த கருத்தையும் கூற முடியாமல், தவித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக