புதன், 10 ஜூலை, 2013

ஐஐடிக்களில் காலியாக கிடக்கும் 769 சீட்கள்..! பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்களுக்கான இடங்களை நிரப்பாமல்

மும்பை: ஐஐடி எனப்படும் இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் சீட் கிடைத்தும் 769 பேர் சேரவில்லை என்றால் நம்ப முடிகிறதா?. ஐஐடியில் படிக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாக இருந்து வரும் நிலையில், இதில் இந்த ஆண்டு இடம் கிடைத்தும் கூட நூற்றுக்கணக்கானவர்கள் சேர மறுத்துள்ளனர். இதனால் செகண்ட் ரவுண்ட் சேர்க்கையை ஆரம்பித்துள்ள ஐஐடிக்கள். வழக்கமாக இடஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் தான் காலியாக இருக்கும். தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று ஏதாவது காரணம் கூறி, 'உள்குத்து' வேலை பார்த்து, பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்களுக்கான இடங்களை நிரப்பாமல் விட்டுவிடுவர். ஆனால், இந்த முறை காலியாக இருப்பது பொதுப் பட்டியலில் உள்ள ஜெனரல் கேட்டகிரி இடங்கள் என்பது தான் முக்கியமான விஷயம். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐஐடிக்களில் நம்பிக்கையில்லை, நல்ல கோர்ஸ் கிடைக்கவில்லை என்று இதற்கு பல காரணங்களை மாணவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ஐஎஸ்எம்-தன்பாதில் தான் அதிக இடங்கள் காலியாக உள்ளன. புதிய விதியால் குழப்பத்தில் மாணவர்கள்: இது தவிர ஐஐடிக்களில் சேருவதற்கான தகுதி தொடர்பாக திடீரென ஒரு விதிமுறையை இந்த நிர்வாகங்கள் புகுத்தியுள்ளன. அதாவது அவர்களது பள்ளிப் பொதுத் தேர்வில் '20 percentile' மார்க் வாங்கியிருக்க வேண்டும் என்பது தான் இது. இது சதவீதம் அல்ல. இதற்கான விளக்கம்: A score that is greater than or equal to 20% of the scores of people taking the test. இது தான் percentile rank. முன்பு 60 சதவீதம் மார்க் வாங்கியிருந்தால் ஐஐடிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது. பின்னர் இட ஒதுக்கீடு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பும் ஒரு பிரிவினரிடமிருந்து கிளம்பியது. இந் நிலையில், திடீரென percentile rank என்று ஒன்றைக் கொண்டு வந்து, பெரும்பாலானவர்களை தேர்வே எழுதவிடாமல் பார்த்துக் கொண்டுவிட்டனர் என்றே தெரிகிறது. இது தெரியாமல் தேர்வை எழுதி பாஸ் செய்தவர்களில் சுமார் 80 பேருக்கு percentile rank இல்லை என்று கூற இடம் தர மறுத்துள்ளன ஐஐடிக்கள். இந்த சீட் தர மறுக்கும் ஐஐடிக்களில் முதலிடத்தில் இருப்பது ஐஐடி-மெட்ராஸ் தான். அடுத்த இடத்தில் இருப்பது ஐஐடி-காரக்பூர். இவ்வாறு இடம் மறுக்கப்பட்ட மாணவர்கள் கோர்ட்டுக்குப் போக தயாராகிக் கொண்டுள்ளனர் என்பது தனிக்கதை. ஐஐடி-சென்னை மாஜி இயக்குனர் இந்திரேசன், ஐஐடி டெல்லி மாஜி இயக்குனர் நிகம் ஆகியோர் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், தலித் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 50 சதவீதம் காலியாகவே இருந்துவிடுவதாகவும், இவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற தவறுவதால் இடங்கள் நிரம்புவதில்லை என்றும், அதில் படிப்பில் சேர்ந்த 25 தலித் மாணவர்கள் சரியாக படிக்காததால் பாதியிலேயே படிப்பிலிருந்து வெளியேற்றுவதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் 20 சதவீதம் வசிக்கும் ஒரு சமூகம் இன்னும் இந்த நிலைமையில் இருக்க நிச்சயம் கடந்த பல நூற்றாண்டுகளாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கல்வி மறுக்கப்பட்டதும் காரணமே தவிர வேறல்ல.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: