வெள்ளி, 12 ஜூலை, 2013

ராசா வழங்கிய 51 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்யமுடியாது ! உச்சநீதிமன்றம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், 2004-07-ம் ஆண்டு காலத்தில், அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா வழங்கியவ 51 லைசென்ஸ்களை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற முறையில் அளிக்கப்பட்ட உரிமங்கள் இவை. 2012-ம் ஆண்டு இப்படி வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதுபோல், இவற்றையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று யோகேஷ் ஆனந்த் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி நீதிபதிகள் அவற்றை தள்ளுபடி செய்தனர். மேலும் வோடபோன், டாடா டெலிசர்வீசஸ், ஐடியா செல்லுலார், ஆதித்யா பிர்லா டெலிகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், தொலை தொடர்பு இலாகாவின் நெறிமுறைகளை மீறி விட்டதாகவும், அந்த நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: