வியாழன், 11 ஜூலை, 2013

சுப்ரீம் கோர்ட் : இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் MP MLA பதவிகள் பறிக்கப்படும்

புதுடில்லி :கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. லில்லி தாமஸ் என்ற வழக்கறிஞரும், "லோக் பிரகார்த்தி' என்ற தன்னார்வ அமைப்பும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது:"குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது' என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு, 8 (4), "கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களை, தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து, மூன்று மாதங்களுக்கு, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்க முடியாது. இந்த காலத்தில், அவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மேல் கோர்ட்டுகளில் முறையீடு செய்யலாம். அந்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அந்த மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என, கூறுகிறது.இந்த சட்டப் பிரிவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இருப்பதுடன், குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், மேல் முறையீடு செய்வதன் மூலம், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவிகளில் தொடர்ந்து நீடிப்பதுடன், அனைத்து சலுகைகளையும் பெறுகின்றனர்.சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு மற்றொரு விதமாகவும் இந்தச் சட்டம் உள்ளது. எந்த வழக்கிலாவது, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் பறிபோவது, உறுதியாகியுள்ளது."....அப்போ பெங்களூர் தீர்ப்பு வந்தால்? நமக்கு அடுத்த முதல்வர் யாருங்க?
எனவே, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை, ரத்து செய்வதுடன், அதில் திருத்தமும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,க்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 8 (4), அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இந்த சட்டப் பிரிவு செல்லாது.
கிரிமினல் வழக்குகளில், எந்த மக்கள் பிரதிநிதிக்காவது தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே, அவரின், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவிகள் பறிக்கப்படும். ஆனாலும், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ளவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.இந்த விவகாரத்தில், சாதாரண மக்களுக்கு ஒரு நீதியும், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நீதியும் பின்பற்றப்படுவது சரியல்ல.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றாலும், அதை எதிர்த்து, மேல் முறையீடு செய்து, தொடர்ந்து பதவி சுகத்தை அனுபவிக்க முடியாத நிலை, மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவு, இனிமேல் சிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் பொருந்தும் என்பதால், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு, இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனிமேல், எந்த வழக்கிலாவது, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் பறிபோவது, உறுதியாகியுள்ளது.

அரசியல் கட்சிகள் அதிர்ச்சி:குற்றப் பின்னணியுடைய மக்கள் பிரதிநிதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட், கடிவாளம் போட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. காங்., மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான, கபில் சிபல், பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், இதுகுறித்து பதில் அளிக்க மறுத்து விட்டனர்."சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை, முழுமையாக படித்து பார்த்த பின், கருத்து கூற முடியும்' என, அவர்கள் கூறிவிட்டனர்.

சிக்குவது யார் யார்?தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக நடைமுறைகளுக்கான சீர்திருத்த அமைப்பு ஆகியவை, குற்றப் பின்னணி உடைய, மக்கள் பிரதிநிதிகள் பற்றிய பட்டியலை தயாரித்துள்ளன. இதன்படி, தற்போதைய எம்.பி.,க்களில், 162 பேருக்கு எதிராக, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில், 76 பேர், ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெறக் கூடிய, குற்றங்களை செய்துள்ளனர்.அதேபோல், நாடு முழுவதும் உள்ள, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 1,460 எம்.எல்.ஏ.,க்கள் மீது, பல்வேறு கோர்ட்டுகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 30 சதவீதம் பேர், ஐந்தாண்டுகளுக்கு மேல், சிறைத் தண்டனை பெறக் கூடிய, குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

கிரிமினல் வழக்குகளில் தமிழகத்தின் நிலை என்ன?தமிழகத்தின் எம்.எல்.ஏ.,க்கள், 29 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் குறித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம், நாடு தழுவிய அளவில் நடத்திய சர்வேயில், இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில், 66 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 36 பேர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவை தவிர, சொத்து குவிப்பு மற்றும் பிற குற்ற வழக்குகளும் பல எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ளன.இதில், அ.தி.மு.க.,வில், 46 எம்.எல்.ஏ.,க்கள்; தி.மு.க.,வில், ஏழு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், மூன்று; பா.ம.க.,வில் இருவரும் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தளி தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கொலை வழக்கில் சிக்கி குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தில், விடுதலையான அவர் மீது, கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.பா.ம.க., - எம்.எல்.ஏ., குரு மீது, மரக்காணம் கலவரம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதில், விடுதலையான அவர் மீது, மீண்டும் ஒருமுறை, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.அ.தி.மு.க.,வின் சேலம் எம்.பி., செம்மலை மீது, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, எம்.பி., வேட்பாளருக்கான வாக்குமூலத்தில், செம்மலை கூறியுள்ளார்.
சிக்குவது யார் யார்: தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக நடைமுறைகளுக்கான சீர்திருத்த அமைப்பு ஆகியவை, குற்றப் பின்னணி உடைய, மக்கள்பிரதிநிதிகள் பற்றிய பட்டியலை தயாரித்துள்ளன. இதன்படி, தற்போதைய எம்.பி.,க்களில், 162 பேருக்கு எதிராக, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில், 76 பேர், ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெறக் கூடிய, குற்றங்களை செய்துள்ளனர். அதேபோல், நாடு முழுவதும் உள்ள, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 1,460 எம்.எல்.ஏ.,க்கள் மீது, பல்வேறு கோர்ட்டுகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 30 சதவீதம் பேர், ஐந்தாண்டுகளுக்கு மேல், சிறைத் தண்டனை பெறக் கூடிய, குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்."மாஜி' கமிஷனர்கள் வரவேற்பு :
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் வரவேற்று உள்ளனர். முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள், எம்.எஸ்.கில், கோபாலசாமி, எஸ்.ஒய்.குரேஷி ஆகியோர் கூறியுள்ளதாவது:கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க் களின் பதவிகளை பறிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஒரு மைல் கல் தீர்ப்பு. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, நாட்டின் அரசியல் நடைமுறையை சீர்திருத்தம் செய்வதற்கு பெரிதும் உதவும். ஜனநாயகம், மேலும் வலுப்பெறும். அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையில், பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். நாட்டின் ஜனநாயக நடைமுறையின் பாதுகாவலராக, சுப்ரீம் கோர்ட் விளங்குகிறது. அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் கலந்திருப்பது, நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.dinamalar,com

கருத்துகள் இல்லை: