ஞாயிறு, 7 ஜூலை, 2013

நயன்தாரா: தமிழில் நான் எப்போதும் இண்டஸ்ட்ரியில்



அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா டகுபதி, என பல பிரபல
நட்சத்திரங்கள் அஜித்தின் 53-வது படத்தில் நடித்துள்ளனர்.பல நட்சத்திரங்களின் கூட்டணி இருந்தாலும், நயன்தாராவின் ரீஎன்ட்ரி தான் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும்அதிகரித்துள்ளது.அஜித்துடன் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா “ தமிழில் இது என் ரீ என்ட்ரிஎன்றே சொல்ல முடியவில்லை. ரசிகர்கள் எப்போதும் போல் எனக்கு வரவேற்பு கொடுப்பது, நான் எப்போதும் இண்டஸ்ட்ரியில்இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.அஜித்தும், நானும், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. மேலும் அஜித்தும் நானும் இணையும் இணையும் மூன்றவது படம் என்பதால் எங்களுக்குள் இருக்கும் புரிதலால் நாங்கள்இயல்பாக நடித்தோம். அஜித் காயத்தை பொருட்படுத்தாமல் நடிப்பது, காட்சி திருப்தியாகும் வரை ரீடேக் எடுப்பது போன்றவை மற்றவர்களையும் கடினமாக உழைக்கவைக்கின்றது.மேலும் அஜித்தின் மீதுள்ள நம்பிக்கையும், இயக்குனர் விஷ்ணுவர்தனின் திறமையும் தான் இந்தப் படத்திற்கு நான் ஒப்புக்கொள்ளக் காரணம்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: