தெலங்கானா தனி மாநில கோரிக்கை
குறித்து காங்கிரஸ் கட்சி இன்று இறுதி முடிவெடுக்க உள்ளதாக
கூறப்படுகின்றது. ஹைதராபாத் நகரை சேர்க்காமல் தனித்தெலங்கானா மாநிலம்
அமைக்கலாம் என காங்கிரஸ் தலைமை கருதுவதாகவும். மழைகால கூட்டத் தொடரில் இந்த
அறிவிப்பு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனித் தெலங்கானா கோரிக்கை கடந்த சில மாதங்களாக அடங்கி இருந்த நிலையில், தற்போது அப்பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.நாடாளுமன்ற
தேர்தல் நெருங்குவதால் இப்பிரச்னையில் இறுதி முடிவெடுக்க வேண்டிய
நெருக்கடிக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தனித்
தெலங்கானா மாநிலம் அமைப்பதா வேண்டாமா என்பது குறித்து இனறு இறுதி
முடிவெடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹைதராபாத் நகரை சேர்க்காமல்
தனித்தெலங்கானா மாநிலம் அமைக்கலாம் என காங்கிரஸ் தலைமை கருதுவதாகவும்,
இதுகுறித்த அறிவிப்பை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு
முன்னதாக, அதாவது இம்மாத இறுதிக்குள் அறிவித்துவிட வேண்டும் என காங்கிரஸ்
மேலிடம் விரும்புவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே
சமயம் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாமா என்ற எண்ணமும்
காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவுவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக