ஒரு கல் ஒரு கண்ணாடி ஜெயிக்கும் என்று நம்பியிருப்பார்கள்... ஆனால் இந்த அளவு மிகப்பெரிய வவேற்பு கிடைக்கும், அதுவும் முதல் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காத அளவுக்கு என்று உதயநிதி எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
படத்தைப் பார்க்காமலே, சந்தானம் கலக்குகிறார், அவர்தான் ஹீரோ என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள், இப்போது உதயநிதியின் நடிப்பை ஓஹோவெனப் புகழ ஆரம்பித்துள்ளனர்.அறிமுக ஹீரோ என்று சொல்ல முடியாத அளவுக்கு நகைச்சுவை, ரொமான்ஸ், பாட்டு என பட்டையைக் கிளப்பிவிட்டார் உதயநிதி என விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "மக்கள் ரொம்ப ரசிச்சிப் பார்க்கிறார்கள். சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அப்படியொரு வரவேற்பு. வெள்ளிக்கிழமை ஏ பி சி என எல்லா வகுப்பு ரசிகர்களுடனும் படம் பார்த்துவிட்டோம். எல்லோருமே எங்களை திகைக்க வைக்கும் அளவு ரசிக்கிறார்கள், படத்தை.
நான் நிஜமாவே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறைய போன்கால்கள்.
இந்தப் படத்தின் வெற்றிக்கான பங்கு இயக்குநர் ராஜேஷ் மற்றும் சந்தானத்தைச் சேரும். ஹாரிஸ் ஜெயராஜ் அருமையான இசை தந்தார். பாடல்களுக்கு செம ரெஸ்பான்ஸ்.. என்னையும் ஹீரோவா ஏத்துக்கிட்டதுக்கு ரசிகர்களுக்கு நன்றி. எனக்கேத்த கதை என்றால் நடிப்பேன். இல்லாவிட்டால் பொருத்தமான கதைக்கு காத்திருப்பேன்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக