தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்லும் வகையிலான சிறிய ரக புல்லட் ப்ரூப் காரை டாடா மோட்டார்ஸ் வடிவைத்துள்ளது.
மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமிருக்கிறது. அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு பல விதங்களில் அச்சுறுத்தல் இருக்கிறது.கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களால் அதிக அளவில் போலீசார் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீசார் செல்லும் வகையில் புதிய புல்லட் ப்ரூப் நானோ காரை டாடா வடிவமைத்துள்ளது.
புல்லட் ப்ரூப் கார் மட்டுமல்ல, இந்த கார் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் காரும்கூட. ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் இயங்கும் திறன் வாய்ந்தது. இந்த காரில் 2 பேர் பயணம் செய்ய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக