திங்கள், 9 ஏப்ரல், 2012

தாத்தா இறந்த தீட்டு கழிக்காமல் பேரன் தேர்வு எழுதக்கூடாதாம்!

போபால், ஏப். 8- தாத்தா இறந்து போனதால், பேரனான மாணவன் தேர்வு எழுதக்கூடாது என்று ஓர் ஆசிரியர் அவனைத் திருப்பி அனுப்பியிருக் கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாதோல் மாவட்டத்தின் பனியான் டோலா என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பயிலும் நவீன் பர்மன் என்ற 7 வயதுள்ள  2 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப் பட்டுள்ளான்.
ஏப்ரல் 2 ஆம் தேதியன்று தேர்வு எழுதப் பள்ளிக்குச் சென்றபோது, ஒரு ஆசிரியர் உனது வீட்டில் சாவு விழுந்துவிட்டது. அதனால் நீ தூய்மையாக இல்லை. அதனால் நீ தேர்வு எழுத முடியாது என்று கூறி அவனை திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை ராகேஷ் குமார் புகார் அளித்ததன் பேரில் ஆசிரியரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இது போல் தீட்டு, தோஷம் என்று பேசிக் கொண்டிருக்கும்  மூடர்கள் எவ்வாறு ஆசிரியர்களாக இருக்கின்றனர் என்பது விளங்கவில்லை.

கருத்துகள் இல்லை: