உத்தரபிரதேச புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொணட் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இது பிரதமருடன் அகிலேஷ்யாதவின் முதல் சந்திப்பாகும்.
சந்திப்புக்கு பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மத்திய அரசு திட்டங்களுக்கான பணத்தை விரைவில் வழங்க கேட்டு கொண்டதாக கூறினார். பிரதமருடன், கங்கை ஆற்றை சுத்தப்படுத்துதல் மற்றும் மாநில மின்சார நிலையங்களில் நிலக்கரி சப்ளை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். மாயாவதி ஆட்சியில் நிறுவப்பட்ட பூங்காக்கள் ஏற்கெனவே நாங்கள் கூறியபடி பள்ளி கூடங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மாற்றப்படும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக