செவ்வாய், 10 ஏப்ரல், 2012

மாயாவதி மீது ஊழல் விசாரணை ஆணையம்: முதலமைச்சர் அகிலேஷ் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை கொடுத்துள்ளார். அடுத்த கட்டமாக மாயாவதி ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை தோண்டி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல துறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் இதுபெரிய பிரச்சினையாக பேசப்பட்டது.   குறிப்பாக தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்து இருப்பதை சி.பி.அய். கண்டுபிடித்து விசாரித்து வருகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.அய். அதிரடி சோதனை நடத்தியது. மாயாவதி தோல்விக்கு இந்த ஊழல் புகாரும் காரணமாக அமைந்தது.  

இதுபோல் மாயாவதி ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் ஏராளமான முறைகேடுகளும், ஆடம்பர செலவுகளும் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாயாவதி ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்-முறைகேடு புகார்கள் பற்றி நீதி விசாரணைக்கு முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மாயாவதி மீது ஊழல் விசாரணை நடத்தப்படும் என்று சமாஜ்வாடி கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த விசாரணைக்கு அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.  லக்னோ உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விசாரணை ஆணையத்திற்குத் தேவையான உதவிகளை செய்வார்கள்.

கருத்துகள் இல்லை: