ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

தமன்னாவோட போஸ்டர் செலவு மட்டுமே 70 லட்ச ரூபாயாம்



மாவீரன்ல பட்டைய கிளப்புனாருல்ல ராம்சரண்.. ஆமா..  சிரஞ்சீவியோட புள்ள..  அவரு நடிச்சு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிச்சிருக்கிற படம் ரகளை..  அப்படின்னா ஒரு எதிர்பார்ப்பு  இருக்கத்தானே செய்யும்..நாமும் எதிர்பார்ப்போடுதான் ரகளைய பார்க்கப் போனோம்.. 
தூங்கி எந்திரிச்சவுடனயே ஒரு ஃப்ரஷ்னஸ் இருக்கும்ல.. அப்படி ஒரு ஃப்ரஷ்னஸ் எப்பவும் இருக்கு ராம்சரண் முகத்துல.. ஆனா.. வீரதீர காட்சிகளிலும்  கூட சோகம் அப்பியிருக்கிற மாதிரியே முகபாவனை காட்டுறாரு.. சுறுசுறுப்புலயோ ஆட்டபாட்டத்துலயோ அவரு குறை வைக்கல. யூத்துகளுக்கு பிடிக்கிற மாதிரி ரொம்பவும் ஸ்டைலிஷாகத்தான் படம் முழுக்க வர்றாரு.. சண்டைக் காட்சிகள்லயும் தூள் கிளப்புறாரு.
தமன்னாவோட இயல்பான அழகை ஒரே ஒரு அருவிக் குளியல் காட்சியில மட்டும்தான் பார்க்க முடியுது.. மத்தபடி படம் முழுக்க ஒப்பனை முகம்தான். ஒரு பாடல் காட்சியில  இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி வர்றாரு.. இடுப்பை மட்டுமல்ல உடம்பயும் வில்லா வளைச்சு அந்த ஆட்டம் போடறாரு. 
நம்ம பார்த்திபன், நாசர், அஜ்மல்ன்னு இவங்களும் வந்து போறாங்க. வில்லன் கோட்டா சீனிவாசராவின் பாத்திரமும் கூட பேசும் அளவுக்கு இல்லை. இதுக்கு மேல பாலிவுட் வில்லன்கள் அஞ்சு பேரு வேற எப்பப் பார்த்தாலும் உறுமிக்கிட்டே இருக்காங்க.
மணிசர்மா மியூசிக் போட்ருக்காரு.. ஒண்ணு ரெண்டு பாடல் ஓ.கே.. மத்தபடி பெரிசா சொல்லிக்கிர்ற  மாதிரி இல்ல.. சமீரோட கேமராவுக்கு நல்ல தீனி.. இங்கே பொள்ளாச்சி, ஹைதராபாத், கோவான்னு ஆரம்பிச்சு.. பாங்காக், சுவிட்சர்லாந்து, மலேசியா, சீனாவுல உள்ள மூங்கில்காடு வரைக்கும் காட்சிகளை அள்ளிக் கொண்டு வந்து திரையில கொட்டியிருக்கு. 

பத்து நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வந்தே ஆகணும். அதுவும் ஸ்பீட் டான்ஸா இருந்தாகணும்கிறதுல இருந்து இந்தத் தெலுங்கு சினிமாக்காரங்க மாறவே மாட்டாங்க போல. ரகளையும் அந்த ரகம்தான். தெலுங்குலயும், தமிழ்லயும் எடுத்தாலும் தெலுங்கு நெடியே தூக்கலா இருக்கு. மாவீரன் பாப்புலாரிட்டிய வச்சே படத்த ஓட்டிடலாம்கிற நம்பிக்கையில 40 கோடிய இரைச்சிருக்காராம் சவுத்ரி. 
இந்தியாவுல எந்தப் படத்துக்கும் இந்த அளவுக்கு வால் போஸ்டர் அடிச்சதில்லையாம்.. முதல் கட்டவால் போஸ்டர் செலவு மட்டுமே 70 லட்ச ரூபாயாம்.  காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் காட்டினா போதுமா? மனசுல ஒட்டணுமே..? எப்படி எடுத்தாலும் மசாலா படம் ஓடும்கிற நம்பிக்கை ரொம்பவே இருக்கும் போல இந்த ரகளை யூனிட்டுக்கு.  சின்ன வயசுல பிரிஞ்சு வளர்ந்த பிறகு ஒண்ணு சேர்ற கதாபாத்திரங்கள்..  உச் கொட்ட வைக்கணும்னு வலிய திணிக்கிற ஃப்ளாஷ் பேக்.. தெலுங்கு சினிமாக்களில் இடம் பெறும் காளி கோயில்ன்னு வழக்கமான எல்லா சங்கதிகளும் இதிலும் உண்டு.  ஆமா.. கதை.. திரைக்கதை..? எந்தப் பக்கமும் இழுக்க முடிகிற ஒரு ரப்பர் கதையை வைத்துக் கொண்டு மனம் போன போக்கில் இழுத்திருக்கிறார்கள். இயக்குனர் சம்பத்தாம்.. டைரக்டர் சார்.. அடுத்தாச்சும் உருப்படியா யோசிச்சு ஒரு நல்ல படம் பண்ணுங்க..

படம் முடிஞ்சு வெளிய வர்றப்ப,  இதே மாதிரி மசாலா படங்கள எத்தனையோ தடவ பார்த்தாச்சேங்கிற சலிப்பும் சேர்ந்து வருது.   
ரணவேதனை என்று ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது என்றாலும்..  ரகளை ஏனோ களை கட்டவில்லை.

கருத்துகள் இல்லை: