Viruvirupu
மெகா சமூக வலைத்தளம் பேஸ்புக்கின் பில்லியன்கள் பெறுமதியான சொத்தில் பாதி தன்னுடையது என வழக்கு தொடுத்துள்ள நபர், தனது தரப்பில் வாதாடும் வக்கீல் டீமில் புதிதாக 5 பிரபல வக்கீல்களை இணைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.இந்த மூவரும் நியூயார்க்கின் பிரபல சட்ட நிறுவனங்களில் தமது வேலைகளை ராஜினாமா செய்து விட்டு, இந்த டீமில் வந்து இணைந்துள்ளனர்.
845 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட பேஸ்புக்கின் கடந்த ஆண்டு வருமானம், 3.7 பில்லியன் டாலர். இந்தளவுக்கு வருமானம் கொழிக்கும் நிறுவனத்தில் பாதி தம்முடையது என்று பால் சிக்லியா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பஃபலோவில் உள்ள நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க், 2003-ம் ஆண்டு ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வந்த நாட்களில், தமது நண்பருடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார்.
தாம் புதிதாக தொடங்கும் வர்த்தகம் ஒன்றில் சிறிதளவு பணம் முதலீடு செய்யுமாறு நண்பர் பால் சிக்லியாவை கேட்க, அவரும் பணம் கொடுத்திருக்கிறார்.
அந்த வர்த்தகத்தில் இருவருக்கும் சம பங்குள்ள பார்ட்னர்ஷிப் இருப்பதாக, ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதன்பின் மார்க் தொடங்கிய பேஸ்புக் பிரபலமாகி, மற்போது மல்டி-பில்லியன் டாலர் நிறுவனமாகி விட்டது.
தாம் கொடுத்த பணத்தில் பேஸ்புக் தொடங்கப்பட்டது என்பதால், ஒப்பந்தப்படி அதன் சொத்தில் பாதி தமக்குரியது என்கிறார் பழைய நண்பர் பால். அதற்காகவே வழக்கும் தொடர்ந்துள்ளார்.
மார்க் என்ன சொல்கிறார்? பாலிடம் பணம் வாங்கியது நிஜம். ஒப்பந்தம் செய்தது நிஜம். ஆனால் அந்த வர்த்தகம் பேஸ்புக் அல்ல. அது வேறு, இது வேறு என்கிறார்.
பால் சிக்லியா தனது வக்கீல் டீமில் தற்போது இணைத்துக் கொண்டிருப்பவர்கள், நியூயார்க் சட்ட நிறுவனம் மில்பேர்க் வக்கீல்களுடன் மேலதிகமாக இந்த வழக்கை கவனிக்கப் போகிறார்கள். தமது தரப்பு பலமாக இருப்பதாலேயே திறமையான வக்கீல்கள் தமது டீமில் இணைந்து கொள்ள வந்திருப்பதாக பால் சிக்லியாவின் வக்கீல் டீமின் தலைவர் டீன் போலன்ட் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பேஸ்புக் சார்பில் வாதாடவுள்ள கலிபோர்னியாவைத் சேர்ந்த சட்ட நிறுவனம் மென்லோ பார்க்கின் வக்கீல்கள், “எதிர்த் தரப்பு வைத்திருக்கும் ஒப்பந்தம், பேஸ்புக் என்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் என்று அதில் எந்த இடத்திலும் குறிப்பிப்படவில்லை. எனவே, பேஸ்புக்குக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது” என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக