சனி, 10 மார்ச், 2012

அமெரிக்காவில் 34 லட்சம் இந்தியர் - பெருமளவு தெலுங்கர், தமிழர்

அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அங்கு 34 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் 10 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய இனமாக ஆசிய - அமெரிக்கர்கள் உயர்ந்துள்ளனர். பத்தாண்டுகளில் 68 சதவீத வளர்ச்சி கண்டுள்ளனர் இந்தியர்கள், எண்ணிக்கையில்.
அமெரிக்காவில் அதிகளவில் உள்ள பிற இனத்தவர்களில் அமெரிக்க சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர். எண்ணிக்கையில் அவர்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர். இவர்களுக்கு அடுத்து பிலிப்பினோ - அமெரிக்கர்கர்கள். அவர்களின் எண்ணிக்கை 34.2 லட்சம். அடுத்து இந்தியர்கள் 34 லட்சம் பேர் (இவர்களில் பெருமளவு தெலுங்கு மற்றும் தமிழர்கள்).
இவர்களில் வாக்குரிமை பெற்ற இந்தியர் எண்ணிக்கை 10 லட்சம். அதாவது 1 மில்லியன். 2000-ம் ஆண்டில் இது 5 லட்சமாக இருந்தது. 10 ஆண்டுகளில் 100 சதவீதமாக வாக்குரிமை பெற்றோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தெற்காசியாவைச் சேர்ந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் கணிசமாக உயர்ந்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 212 சதவீதம் உயர்ந்து 147300 ஆக உள்ளது.

பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கையும் 100 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 204000 ஆக இருந்த பாகிஸ்தானிகளின் எண்ணிக்கை இப்போது 409000 ஆக உயர்ந்துள்ளது (ஆனால் தங்கள் நாட்டவர்கள் 1 மில்லியன் பேர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறி வருகிறது பாகிஸ்தான்).

இலங்கையைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்திலிருந்து 45400 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்கள்:

நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ.

மெட்ரோ நகரங்கள் தவிர்த்து, பீனிக்ஸ், சார்லோட், கரோலினா, ராலே, சான் அன்டோனியா, சியாட்டில், ஸ்டாக்டன், ஜாக்ஸன் வில்லே, ஹாரிஸ் பர்க் மற்றும் நெவாடாவின் லாஸ் வேகாஸிலும் கணிசமாக இந்தியர் வசிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: