செவ்வாய், 6 மார்ச், 2012

சிங்கப்பூர் விழாவில் 5 விருதுகளை அள்ளிய மங்காத்தா


சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் அஜீத்தின் மங்காத்தா 5 விருதுகளை அள்ளியுள்ளது.
ஐஎம்என் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 3ம் தேதி சிங்கப்பூரில் நடந்தது. அந்த விழாவில் சிறந்த படம் உள்பட அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிக் குவித்தது அஜீத் குமாரின் 50வது படமான மங்காத்தா சாதனை படைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர் வெங்கட் பிரவு, சிறந்த ஒளிப்பதிவாளர்(சக்தி சரவணன்), சிறந்த பாடகி(சுசித்ரா) மற்றும் சிறந்த துணை நடிகர்(பிரேம்ஜி அமரன்) ஆகிய 5 பிரிவுகளில் மங்காத்தாவுக்கு விருதுகள் கிடைத்துள்ளது.

அண்ணன் வெங்கட் பிரபுவும், தம்பி பிரேம்ஜி அமரனும் மங்காத்தாவுக்காக விருது பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பு சிறந்த நடிகர்-ஸ்ரேயா சிறந்த நடிகை

வானம் படத்திற்காக சிலம்பரசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரௌத்திரம் படத்திற்காக ஸ்ரேயாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வளர்ந்து வரும் நடிகருக்கான விருது எங்கேயும், எப்போதும் படத்துக்காக ஜெய்க்கு கிடைத்தது.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரேயா, ஹன்சிகா மோத்வானி, சந்தியா, மேக்னா நாயுடு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்

கருத்துகள் இல்லை: