After ensuring Rajan had got the money from his driver and left for his home, the CBI team went there and nabbed Murugesan and Rajan. CBI Officials conducted chemical tests on Rajan and Murugesan and it proved positive. The officials then seized Rs two lakh and the i-pod from Rajan and arrested him and his driver.சென்னை : அடுத்தடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன், லஞ்ச வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்; அவரது டிரைவரும் சிக்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ஜோசப்; வர்த்தகர். வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு தொடர்பாக, இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முடக்கியுள்ளதை நீக்க உதவுமாறு, சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த தன் நண்பர் உபயதுல்லா உதவியை நாடினார்.வங்கிக் கணக்குகள் முடங்கியுள்ளதை விடுவிக்க வேண்டிய பொறுப்பு, வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன் கட்டுப்பாட்டில் உள்ளது.இதையடுத்து, உபயதுல்லா, ராஜன் உதவியை நாடினார். இதை சரிசெய்ய, 10 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கேட்டார் ராஜன். பலத்த பேரத்துக்குப் பின், எட்டு லட்ச ரூபாய் பணமும், ஒரு, "ஐ பேடும்' கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூரில் உள்ள சர்ச் ஒன்றின் அருகே வந்து தருமாறு, ராஜனின் டிரைவர் முருகேசன், உபயதுல்லாவிடம் கூறினார்.அதிகாரியை
இதுகுறித்து, உபயதுல்லா, சி.பி.ஐ.,க்கு தகவல் கொடுத்தார்.
இதன்படி, நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் சர்ச் அருகே வந்த முருகேசனிடம், 2 லட்ச ரூபாய் பணத்தையும், ஐ பேடு ஒன்றையும் உபயதுல்லா கொடுத்தார்; காரில், ராஜன் இல்லை. கார் எங்கு செல்கிறது என, சி.பி.ஐ., போலீஸ் கண்காணித்தது.கார் நேராக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் குடியிருப்புக்குச் சென்றது. முருகசேன் பணத்தையும், ஐ பேடையும் ராஜனிடம் கொடுத்த போது, சி.பி.ஐ., அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.கூடுதல் இயக்குனர் ராஜன், கார் டிரைவர் முருகேசனையும், சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் துருவித்துருவி சோதனை நடத்தினர். வீட்டில், 35 லட்ச ரூபாய் வங்கி இருப்புக்கான ஆவணங்களும்,
11 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். கைதான ராஜன், கார் டிரைவர் முருகேன்இருவரும், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி, யூசிப் அலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும், 21ம் தேதி வரை காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
பரபரப்பை ஏற்படுத்தியவர்:சென்னை சுங்கத் துறை ஆணையராக, நீண்ட காலம் பணியாற்றியவர் ராஜன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றார். போலி ஆவணங்கள் மூலம் கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகள், போதைப் பொருட்களை, அடுத்தடுத்து பறிமுதல் செய்தார். சீனாவிலிருந்து, போலி ஆவணங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நறுமணப் பொருட்கள், வாசனை திரவியங்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற உணவுப் பொருட்களையும் அடுத்தடுத்து பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.உரம் கடத்தலை தடுத்தல்:
சுங்கத் துறை ஆணையராக இருந்த போது, தொழிற்சாலை உப்பு என்ற பெயரில், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, "பொட்டாஷ்' உரம், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டதைக் கண்டறிந்து தடுத்து, கடத்தல் கும்பலை ஒழித்ததில், இவருக்குமுக்கிய பங்குண்டு. இவரது நடவடிக்கைகளால் பலர், "காபிபோசா' சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி, கடத்தல் தடுப்பில் பரபரப்புடன் செயல்பட்டு வந்த ராஜன், லஞ்சம் வாங்கி, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் சிக்கியது, மத்திய அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு, அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜாமின் கோரி மனு தாக்கல்:
லஞ்ச வழக்கில் சிக்கிய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன்,"என்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும்; சிறையில் முதல் வகுப்பு வேண்டும்' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக