பருத்திவீரன்... பஞ்சாயத்து, வழக்கு, புகார்... என பிரச்சினை களிலும் ஒரு சாதனை படைத்தபடி இருக்கிறது.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் 350 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் ஆன ஒரே படம் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த "பருத்திவீரன்'. இப்படி சாதனை படைத்த பருத்திவீரன்... பஞ்சாயத்து, வழக்கு, புகார்... என பிரச்சினை களிலும் ஒரு சாதனை படைத்தபடி இருக்கிறது.
"பருத்திவீரன்' படம் தெலுங் கில் "மல்லிகாடு' என்ற பெயரில் வெளியாகவிருக்கும் நிலையில்..."தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், ஜெமினி கலர் லேப் நிறுவனமும் எனக்குச் சேரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை பங்கு போட்டுக் கொண்டு எனக்கு நம்பிக்கை மோசடி செய்துவிட்டனர்.
கதாசிரியரான எனக்கு சேரவேண்டிய 25 சதவிகித ராயல்டியை தராமல் ஏமாற்றிவிட்டனர். சட்டப்படி யான நடவடிக்கை எடுத்து அவர்களிடமிருந்து எனக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத்தர வேண்டும்' என சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அமீர்.
சூர்யா, கார்த்தியின் ஒன்றுவிட்ட சகோதரரான ஞானவேல்ராஜா மீது அமீர் கொடுத்த இந்த புகார் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட....
ஞானவேல்ராஜாவிடம் கேட்டோம்.
""ஒரு படத்தை வேறு மொழியில் ரீ-மேக் செய்தால்தான் கதாசிரியருக்கு 50 சதவிகித ராயல்டி தரப்படும். டப்பிங் செய்தால் கதாசிரிய ருக்கு ராயல்டி தரத் தேவையில்லை. இது டைரக் டர்கள் சங்க பை-லாவிலேயே இருக்கு. ‘பருத்தி வீரன்’ படம் விவகாரம் குறித்து அமீருக்கும், எங்களுக்கும் இடையேயான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது.... தேவையில்லாமல் எங்களை அசிங்கப்படுத்து வது போல அமீர் புகார் செய்துள்ளார். இதனால் அமீர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம். பிரச்சினை கோர்ட் டில் இருக்கும் போது இதற்கு மேல் விரிவாக பேச விரும்பவில்லை'' என்றார்.
கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது போலீஸ் கமிஷன ரிடம் புகார் செய் திருக்கிறீர்களே? என அமீரிடம் கேட் டோம்.
"" "பருத்தி வீரன்' படம் எடுத் துக்கிட்டிருக்கும் போது தயாரிப்பாளர் 2 கோடியே 90 லட்சம் செலவு செஞ்சாரு. ஒருநாள் சூர்யா என்கிட்ட... "தயாரிப்பு கம் பெனிய மூடுற நிலமையில் ஞானவேல்ராஜா இருக்காரு. அதனால் படத்தை நீங்களே தயாரிச்சுக்கங்க'னு சொன்னார். அதுக்குப் பிறகு ஒரு கோடியே 67லட்சம் செலவு பண்ணி படத்தை நான் முடிச்சேன். ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனையும் நானே நடத்தினேன். பட வியாபாரம் முடிஞ்சதும் ஞானவேல் போட்ட பணத் தை திருப்பித் தர்றதா பேச்சு. தயாரிப்பாளர் அமீர்னு தான் படமும் சென்ஸார் ஆச்சு. ஞானவேல் எப்படி யோ திருட்டுத்தனமா படத்தை பார்த்திட்டார். படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகும்னு தெரிஞ்சதும் படத்தை கைப்பத்துற முடிவோட "படத்தோட தயாரிப்பா ளர் நான்தான்'னு கவுன்சிலில் பஞ்சாயத்துவைத்தார்.
அப்போது கவுன்சிலில் தலைவராக இருந்த இராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் ஞானவேலோட சேர்ந்துக் கிட்டாங்க. எனக்கு ரொம்பவே நெருக்கடி குடுத்து படத்தை ஞானவேல் பேருக்கு மாத்தவச்சாங்க. என்னோட பணம் ஒரு கோடியே 67 லட்சத்துக்கு மதுரை ஏரியாவை 50 லட்சத்துக்கு அவுட்- ரேட் பண்ணீட்டேன். பாக்கி ஒரு கோடியே 17 லட்சத்தைக் கேட் டேன். 1.67-க்கு செலவு கணக்கு கேட்டாங்க. குடுத்தேன். அதில் சில செலவு வகைகள் டபுள் எண்ட்ரி ஆகியிருக்குனு சொன்னாங்க. நான் க்ரியேட்டர். கணக் குப்பிள்ளை இல்லி யே... கணக்கை துல்லிய மா எழுதுறதுக்கு. டபுள் எண்ட்ரி ஆகியிருந்தா அதை நீக்கிடுங்கனு சொல்லிட்டேன். அந்த வகையில் 37 லட்ச ரூபாயை கழிச்சிட்டு... "ஞானவேல், அமீருக்கு 80லட்சம் தரணும்'னு ஃபைனல் பண்ணி தீர் மானம் போட்டாங்க. அப்பவே.. படத்தோட சாடிலைட் ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ், ரீ-மேக் ரைட்ஸ்களை என் அனுமதி இல்லாம விற்கக் கூடாதுனு இராம.நாராயணன் முன்னிலையில் நானும், ஞானவேலும் எழுதி ஒப்பந்தம் போட்டாச்சு.
இப்படி ஒப்பந்தம் போடவச்ச இராம.நாரா யணன் இன்னொரு பக்கம் ஞானவேல்ட்ட பேசி சாடிலைட் ரைட்ஸை ஒரு டி.வி.க்கு வாங்கிக் குடுத்துட்டார். எனக்கு கவுன்சில் தீர்மானப்படி வரவேண்டிய 80 லட்சத்தை ஞானவேல் தராததால் திரும்ப கவுன்சில் போய் சிவசக்தி பாண்டியன்கிட்ட கேட்டேன்.
"தர்றம்னு சொன்னவரு இப்ப தரமாட்டேங்கிறாரு'னு பாண்டியன் சொன்னார். "கவுன்சில் சொன்னதால்தான் எல்லாத்துக்கும் சம்மதிச்சேன். இப்ப இப்படிச் சொல்றீங் களே?'னு கேட்டு விவாதம் பண்ணினேன். அதில் பிரச்சினையாகி பாண்டியனோட சண்டை போட்டுட்டு... நியாயம் கேட்டு ஹை கோர்ட்டுக்குப் போனேன். 80 லட்ச ரூபாய்க்கு ஞானவேல் ராஜாவை ஸூரிடி கேட்டுச்சு கோர்ட். அவரு ஏதோ டம்மி டாகுமென்ட் ஸை தரவும் அதை கோர்ட் தள்ளுபடி பண்ணி ருச்சு. திரும்பவும் வங்கி ஸூரிடி கொடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது.. எனக்கு 80லட்ச ரூபாய் ஞானவேல் செட்டில் பண்ணணும்னு கவுன்சில் போட்ட தீர்மான நகலை கோர்ட் கேட்டது. அந்த நகலைக் கேட்டு மூணு வருஷமா அலையுறேன்... கவுன்சில் நிர்வாகிகள் தரமாட்டேங்கிறாங்க. வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கு.
இந்த வழக்கு என் முதலீடு 80 லட்சத்தை கேட்டு போடப்பட்ட வழக்குதான். இப்போ நான் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்திருக்கும் புகார்.. கதாசிரியர் என்கிற முறையில் எனக்கு கிடைக்க வேண்டிய ராயல்டியை கேட்டுத்தான். ஒரு மாசத்துக்கு முன்னாடியே... "பருத்திவீரன்' படத்தை தெலுங்கில் டப்பிங் செஞ்சிட்டு வர்றாங்களாம். அதில் "எனக்கான ராயல்டியை வாங்கித் தரணும்'னு’ கவுன் சிலிலும், கலர் லேப்பிலும், எழுத்தாளர் சங்கத்திலும் புகார் கொடுத்தேன். ஆனா அவங்க நடவடிக்கை எடுக்கல. இப்ப படத்தை தெலுங்கில் ரிலீஸ் பண்ண தேதி அறிவிச்ச தால்தான் ‘ராயல்டி’ வாங்கித் தரச் சொல்லி கமிஷனரிடம் புகார் செஞ்சிருக்கேன். டப்பிங்க்கு ராயல்டி இல்லைன்னு சொல்லிட்டு எல்லா மொழி யிலயும் டப் பண்ணி அவங்க சம்பாதிப்பாங்க, கதைய உருவாக்குன க்ரியேட்டர் பரிதாபமா நிக்கணுமா?
டைரக்டர்கள் சங்கத்துக்கு செயலாளரா இருக்க எனக்கே இந்த நிலைமைன்னா... மத்தவங்க நிலமையை நினைச்சுப்பாருங்க'' என வேதனைப்பட்டார் அமீர்.
-இரா.த.சக்திவேல்
thanks nakkeeran +rangarajan kovai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக