புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் சேர்மானம்தான் எல்பிஜி அல்லது லிக்யூடு பெட்ரோலியம் கேஸ் என்று கூறப்படுகிறது. தற்போது கார்களை இயக்குவதற்கான முக்கிய எரிபொருளாக எல்பிஜி மாறி வருகிறது.
பெட்ரோல் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம். ஆம், ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாயில் விற்கப்படும் விலையில், எல்பிஜி ஒரு கிலோ 43 ரூபாயில் கிடைக்கிறது. இதனால், எல்பிஜி கிட்டுடன் வரும் கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கூடி வருகிறது.முன்பு தனியார் நிறுவனங்கள் தனியாக பிட்டிங் செய்து கொடுத்து வந்த எல்பிஜி சிலிண்டர் கிட்டை தற்போது பல முன்னணி நிறுவனங்களே கார்களில் பிட்டிங் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன.
எல்பிஜி சிலிண்டர் கிட்டை காரில் பொருத்துவதற்கு ரூ.20,000 வரை செலவாகும். பொதுவாக 33 கிலோ கொள்ளளவு கொண்ட எல்பிஜி சிலிண்டர்கள் கார்களில் பொருத்தப்படுகின்றன. எல்பிஜி கிட் கார்களின் டிக்கியில் பொருத்தப்படுவதால் சாமான்கள் வைக்கும் இடம் கார்களுக்கு தக்கவாறு 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அடைபட்டு விடும் என்பது மைனஸ்தான்.
இதேபோன்று, உங்களது ஏரியாவில் எல்பிஜி நிரப்பும் பங்க் இருத்தலும் அவசியம். ஆனால், எல்பிஜி பங்குகள் குறைவான அளவில் இருப்பதால் அங்கு நீண்ட கியூவில் நின்றுதான் நிரப்ப வேண்டிய நடைமுறை தொந்தரவும் இருக்கிறது.
எல்பிஜி கிட் பாதுகாப்பானதா?
இந்த நிலையில், எல்பிஜி சிலிண்டர் கிட் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவது உண்மைதான். எதிர்பாராத விதமாக காரின் பின்பக்கத்தில் ஏதேனும் வாகனங்கள் மோதி விபத்து நேரிட்டால் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விடும் என்ற அச்சம்தான் அதில் முக்கியமாக கூறப்படுகிறது.
ஆனால், இதுபற்றி பெரிய அளவில் கவலைப்பட தேவையில்லை என்று கூறுகின்றனர் ஆட்டோமொபைல் வல்லுனர்கள். ஏனெனில், எல்பிஜி சிலிண்டர்கள் மிகவும் பாதுகாப்பான அடுக்குகள் கொண்டதாகவும், உறுதியாகவும் வடிவமைக்கப்படுகின்றன.
எனவே, விபத்து ஏற்பட்டாலும் சிலிண்டர் பாதிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும், பெட்ரோலை விட எல்பிஜியில் இயங்கும் காரால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் 2.3 கிலோ கார்பன் டை ஆக்சைடு எரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ எல்பிஜியின் மூலம் 1.5 கிலோ கார்பன் டை ஆக்சைடு மட்டுமே எரித்து வெளியேற்றப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை ஓரளவு தவிர்க்கும் வாய்ப்பை எல்பிஜி வழங்குகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக