வெள்ளி, 9 மார்ச், 2012

கடிதம் மூலம் தலாக்! Talaq by letterஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுபவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.
இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார்.
இவ் விசயத்தில் இஸ்லாமியர்கள்  பாசித்தை விமர்சித்தாலும், இஸஃலாமிய கொள்கையை தூக்கி பிடித்தனர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் பாசித் திருமணம் செய்ததால் அவரை அமைப்பை விட்டு நீக்கிவிட்டோம் என்றும் பிறகு பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும்” கதை அளந்தனர்.
ஆனால் பாசித் மரைக்காயர் சிறையில் அடைக்கப்பட்ட போது தவ்ஹித் ஜமாத்துதான் அவருக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தனர். இன்று ஒருபடி மேலே சென்று முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரிலும், போனிலும் கிரிமினல் வழக்கை வாபஸ் பெறக் கோரியும், சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மிரட்டுகிறார்கள்.
“நீங்கள் காபிர்களின் (தோழர்களின்) பேச்சை கேட்டு போலிசுக்கு சென்றதால் உங்களுக்கு பாசித் எந்த பணமும் தரவில்லை. மேலும் அவர்கள் சொல்வதை கேட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்தால் உங்கள் பணமும் இருக்கின்ற ஒரே வீடும் வழக்கு செலவுக்காக காலியாகிவிடும்.” என்று மிரட்டி பார்த்துள்ளனர்.
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்
ஆனால் இந்த மிரட்டல் பேச்சுக்கு அடிபணியாத அப்பெண் “எனக்கு இஸ்லாமியர்களைவிட தோழர்கள் மீதுதான் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது; என் வாழ்க்கை பாசித்தால் நாசமாய் போய்விட்டது; இனி எந்த இஸ்லாமிய பெண்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது”. என பதில் கூறியுள்ளார்.
இதனால் இந்த இஸ்லாமிய காவலர்கள் (பாசித்தின் தவ்ஹீத் ஜமாத்வாதி கூட்டாளிகள்) தங்களது இஸ்லாமிய சட்டபுலமையை வெளிபடுத்தும் விதமாக அந்த அப்பாவி பெண்ணுக்கு பதிவு அஞ்சல் (Register Post) மூலம் விவாகாரத்து அனுப்பியுள்ளனர்.
இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.
1. இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கி இருப்பதாக கூறுகிறிர்களே….பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு நினைத்தால் விவகாரத்து செய்யும் ஆணின் இந்த வக்கிர மனம் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இல்லையா?
2. கடிதம், தொலைபேசி மற்றும் வேரொறு சாட்சியும் இல்லாமல் விவாகாரத்து செய்யும் இந்த நடைமுறைகள் இஸ்லாத்தை தவிர, வேறெந்த மதத்திலும் இந்த கொடுமை இல்லையே… எங்கே இருக்கிறது இஸ்லாத்தில் பெண்ணுரிமை? பெண்ணுரிமை என்பதை “மைக்ரோஸ்கோப்” வைத்து கண்டுபிடித்து இஸ்லாமிய அறிஞர்கள் அறியத்தர வேண்டுகிறோம்.
3. முத்தலாக்கையும் ஒரே தடவையில் கூறக்கூடாது என்று வாய்கிழிய பேசும் தவ்ஹீத் ஜமாத்தினர், தன்னுடைய உறுப்பினர்க்கு காட்டியுள்ள வழி முத்தலாக்கையும் ஒரே தடவையில் அதுவும் பதிவு அஞ்சலில் அனுப்பும் வழியைத்தான். எங்கள் அமைப்பிலுள்ளவர்கள்தான் அக்மார்க் இஸ்லாமியர்கள் என்று பிதற்றுகிறீர்களே. இதுதான் நீங்கள் கற்றுக்கொடுத்துள்ள தவ்ஹீதுவாதியின் லட்சணமோ?
4. கோபத்தில் கூட ஒரு கணவன் “தலாக், தலாக், தலாக்” என சொல்லிவிட்டால் அந்த தலாக் செல்லும் என்றும், கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அப் பெண்ணை வேறொருவர்க்கு திருமணம் செய்து, பின்பு விவகாரத்து பெற்று மீண்டும் பழைய கணவர்க்கு புதிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே. இதுதான் எளிய மார்க்கம் இஸ்லாமா?
5. தவ்ஹித் ஜாமத்தை விட்டு பாசித்தை நீக்கிவிட்டதாக கூறினீர்கள்.. ஆனால் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டத்திற்கும், பிரசாரத்திற்கும், ஊரில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் பாசித்தான் முக்கிய புள்ளி. தலை இல்லாம வால் ஆடமுடியுமா? ஆணாதிக்கவாதிகள் இல்லாமல் இஸ்லாமோ அல்லது தவ்ஹித் ஜமாத்தோ நிலைத்து இருக்கமுடியுமா?
6. கந்துரி விழாக்களை (தர்கா நிகழ்ச்சிகள்) தடை செய்ய கூறும் தவ்ஹித் ஜாமத், பாசித் தனது இரண்டாவது மனைவியை அருகில் உள்ள கோட்டைபட்டினம் மகான் ராவுத்தர் அப்பா தர்கா கந்துரி விழாவிற்கு அழைத்து டூர் சென்றரே அதற்கு எந்த ஹதிஸ்லேயாவது விதிவிலக்கு உள்ளதா? (முதல் மனைவி பாசித்திற்கு பிடிக்காமல் போனதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் மனைவி தர்காவிற்கு செல்கிறார் என்பதுதான்)
சரி விஷயத்திற்கு வருவோம் கடிதம், தொலைபேசி மூலம் விவகாரத்து செய்தால் செல்லுமா? செல்லும் என்றால் இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு என்னதான் உரிமைகள் வழங்கி இருந்தாலும் அது தலையில்லா முண்டத்திற்கு சமம் தானே? பெண்களை போகப்பொருளாக பயன்படுத்த உரிமை வழங்கி இருக்கும் மதம் தான் இஸ்லாமா? அதன் விளைவுதான் பாசித் போன்றவர்களா?. ஆனாலும் உள்ளூர் ஜமாத் அவர் அனுப்பிய தலாக் கடிதத்தை புறக்கணித்ததுடன் கண்டித்தும் உள்ளனர்.
பெண்கள் தங்களுக்கான விடுதலை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த ஆணாதிக்கவாதிகளிடம் கிஞ்சித்தும் தேட முடியாது. மாறாக ஆணாதிக்கவாதிகளின் தோலை உரித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட சமூக மாற்றத்திற்காக போரடும் புரட்சிகர அமைப்புகளில் இருந்துதான் பெறமுடியும். இதனையே கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகள் நமக்கு திமிருடன் அறிவித்து இருக்கிறார்கள்.
இனி இஸ்லாமிய பெண்கள் அந்த ஆணாதிக்கவாதிகளின் நடைமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கமுடியும்.
 ___________________________________________________
- ஜமால்

கருத்துகள் இல்லை: