ஞாயிறு, 4 மார்ச், 2012

உ.பியி. மாயாவுடன் கை கோர்க்கிறது காங்கிரஸ்?: பேணி பிரசாத் சூசகம்

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும்கூட மாயாவதியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கக் கூடும் என்று தெரிகிறது.
சமாஜவாதிக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதைவிட மாயாவதியின் பகுஜன் சமாஜூடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர் பேணி பிரசாத் வர்மா, முலாயம் சிங் கட்சியைவிட மாயாவதி கட்சியே சிறந்த கூட்டணிக் கட்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அஜித்சிங்

இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் வந்தால்கூட அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் திட்டமில்லை என்று ராஷ்ட்ரீய லோக் தளத் தலைவர் அஜீத் சிங் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் சமாஜவாதிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அக்கட்சியுடன் ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி அமைக்கும் என்று வெளியான செய்திக்கு அஜீத்சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் காங்கி்ரஸுடனான கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்..

கருத்துகள் இல்லை: