செவ்வாய், 6 மார்ச், 2012

ரஷிய அதிபர் தேர்தல் புதின், மீண்டும் அதிபர் ஆகிறார்


மாஸ்கோ, மார்ச்.5- ரஷிய அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற் றது. விளாடிமிர் புதின், மீண்டும் அதிபர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் பதவிக் காலம் நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. விளா டிமிர் புதின், அதிபர் தேர்தலில் போட்டியிட் டார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஜென்னடி யுகனோவ் உள்பட 4 பேர் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தலை யொட்டி, 91 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந் தன. அங்கு தேர்தல் முறைகேடுகளை கண் காணிக்க 1 லட்சத்து 82 ஆயிரம் வெப் கேமராக் கள் பொருத்தப்பட்டு இருந்தன. 250 பன் னாட்டு பார்வையாளர் கள் உள்பட தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஓட்டுப் பதிவு நடைபெற்றது. தொடர்ச்சியாக 21 மணி நேரம் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட் டுப்பதிவு முடிவடைந்த வுடன், ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.
ஓட்டுப்பதிவு விறு விறுப்பாக நடைபெற் றது. ரஷிய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு 48 சதவிகித ஓட்டுகள் பதி வாகி இருந்தன. வாக்கா ளர்கள் நீண்ட வரிசை யில் நின்று ஓட்டு போட் டனர்.
இந்த அதிபர் தேர்த லில் புதின் வெற்றி பெறு வார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
அவருக்கு 59 சதவிகிதம் முதல் 66 சதவிகிதம் வரையிலான ஓட்டுகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப் புகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, 50 சத விகிதத்துக்கு குறைவான ஓட்டுகள் பெற்றால், முதல் இரண்டு இடங் களை பெற்றவர்களுக்கு இடையே மறுதேர்தல் நடத்தப்படும். ஆனால், புதினுக்கு சுமார் 60 சத விகித ஓட்டுகள் கிடைக் கும் என்பதால், மறுதேர் தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை.
ஏற்கெனவே 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை, அடுத் தடுத்து இரண்டு தடவை புதின் அதிபராக இருந் தார். தொடர்ந்து இரண்டு தடவைக்குமேல் அதிப ராக இருக்கக் கூடாது என்று ரஷிய அரசியல் சட்டம் கூறுவதால், தனக்கு விசுவாசமான டிமிட்ரி மெட்வடேவை அதிபர் ஆக்கிவிட்டு, தான் பிரதமராக பதவி ஏற்றார், புதின்.
தற்போது, 3-வது தட வையாக அவர் அதிபர் ஆகப் போகிறார். அவர் 6 ஆண்டுகளுக்கு இப் பதவியை வகிப்பார்.

கருத்துகள் இல்லை: