டெல்லி: உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இந்தியா அதிபர் முகேஷ் அம்பானி. உலகப் பெரும் பணக்கார இந்தியர்களில் அவர்தான் நம்பர் ஒன்.
உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மொத்தம் 48 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். அதில் முதலிடத்தில் இருக்கிறார் முகேஷ்.
இவரது சொத்து மதிப்பு 22.3 பில்லியன் டாலராகும். உலக அளவில் 80வது இடத்தைப் பிடித்தவரான சாவித்ரி ஜின்டால் மற்றும் குடும்பத்தினர், 113வது இடத்தில் இருக்கும் சுனில் மிட்டல் மறறும் குடும்பத்தினர், 116வது இடத்தில் இருக்கும் குமார் பிர்லா, 118வது இடத்தில் இருக்கும் அனில் அம்பானி, 124வது இடத்தில் இருக்கும் திலிப் சங்க்வி, 133வது இடத்தில் இருக்கும் சசி, ரவி ரூயா, 153வது இடத்தில் இருக்கும் குஷால் பால் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.கடந்த ஆண்டு முகேஷ் அம்பானிக்கு 4.7 மில்லியன் டாலர் அளவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அவரது நிலை சரியவில்லை.
இந்தப் பட்டியலி்ல 2வது இடத்தில் இருப்பவர் லட்சுமி மிட்டல். இவரது சொத்து மதிப்பு 20.7 பில்லியன் டாலராகும். விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி 15.9 பில்லியன் டாலர் சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
உலகப் பட்டியலில் முகேஷ் 19
உலக அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் மெக்சிகோ தொலைத் தொடர்புத்துறையின் பெரும் பணக்காரரான கார்லோஸ், ஸ்லிம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். ஸ்லிம்மின் சொத்து மதிப்பு 69 பில்லியன் டாலராகும்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 61 பில்லியன் டாலருடன் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
அமெரிக்க முதலீட்டுக் குரு வாரன் பப்பட் 44 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
நல்ல நஷ்டம்!
உலகப் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்குப் பேருக்கு கடந்த ஆண்டு நல்ல நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தியர்களில் லட்சுமி மிட்டல்தான் பெரிய நஷ்டத்தை சந்தித்தவர். கடந்த ஆண்டு அவர் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதாவது 10.பி்ல்லியன் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதன் மூலம் டாப் 10 பட்டியலிலிருந்தும் நீங்கியுள்ளார். கடந்த ஆண்டு டாப் 10க்குள் இருந்த மிட்டல் தற்போது 21வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
1226 பேர்
இந்த ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மொத்தம் 1226 பேர் இடம் பிடித்துள்ளனர். இது சாதனை அளவாகும். இந்த பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.6 டிரில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டை விட 100 பில்லியன் டாலர் அதிகமாகும்.
அதிகம் இருப்பது அமெரிக்காவில்தான்
மொத்தம் 58 நாடுகளில் இந்த பணக்காரர்கள் கூட்டம் பரவி விரவிக் கிடக்கிறது. உலகப் பெரும் பணக்காரர்கள் அதிகம் இருப்பது அமெரிக்காவில்தான். அடுத்த இடம் ஆசியா பசிபிக் பிராந்தியத்திற்கு. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க கண்டங்கள் அதற்கடுத்த இடங்களில் வருகின்றன.
104 பெண்களும்
இந்த ஆண்டுப் பட்டியலில் 104 பெண்களும் இடம் பிடித்துள்ளனர். அதிலும், கிறிஸ்டி வால்டன்தான் பெண்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர். இவருக்கு உலகப் பட்டியலில் 11வது இடம் கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக