Viruvirupu New Delhi, India: Kanimzhi bail – Delhi High court put the ball on CBI’s court! Not an easy task for CBI to decide!!
கனிமொழி ஜாமீன் மனு இன்று டில்லி ஹைகோர்ட்டுக்கு வந்தபோது, யாரும் எதிர்பாராத முடிவு ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் லேசாக டபுள்-கேம் ஆடத் தொடங்கியுள்ள சி.பி.ஐ.க்கு கிடுக்கிப்படி போட்டுள்ளது ஹைகோர்ட். “கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பது தொடர்பாக ஆட்சேபணை கிடையாது என்று சொல்ல முடியாது. ஜாமீன்“கொடுக்கலாமா? கூடாதா? என்று கூறவேண்டும். Yes or No!”பட்டியாலா கோர்ட்டில் கனிமொஜி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அதில் தமக்கு ஆட்சேபணை கிடையாது என்று கூறியிருந்த சி.பி.ஐ., இன்றும் அதே நிலைப்பாட்டையே எடுப்பதாகக் கூறியிருந்தது.
ஆனால் ஹைகோர்ட், இந்த விளையாட்டை வேறு விதமாக விளையாடி விட்டது. கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு குறித்து பதிலளிக்குமாறு சி.பி.ஐ-க்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்போது பந்து சி.பி.ஐ. மைதானத்தில்! இவர்கள் சாதகமாக முடிவு செய்தாலும் சிக்கல். பாதகமாக பதில் சொன்னாலும் சிக்கல்.
பட்டியாலா கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும், ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்த பின்னணியில், டில்லி மேலிடத்தின் கண் அசைவு இருந்ததாகக் கூறப்படுகின்றது.
பட்டியாலா நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட உடனேயே, கோபாலபுரத்தின் கோப மெசேஜ், டில்லியில் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு உரிய விதத்தில் அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதையடுத்து டில்லி கொடுத்த ஐடியாவின் அடிப்படையிலேயே ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதாம். இதை டில்லி தி.மு.க.வினர் மிக்க நம்பிக்கையுடன் கடந்த சனிக்கிழமையில் இருந்தே சொல்லித் திரிகின்றனர்.
மத்திய அரசின் விருப்பப்படியே சி.பி.ஐ., இந்த விஷயத்தில் இறங்கி வந்ததாக சொல்லப்படுகின்றது. “நோ அப்ஜெக்ஷன்” என்ற அளவுவரை சி.பி.ஐ. செல்லத் தயாராக இருந்தது. ஆனால், இப்போது அதற்கு ஒருபடி மேலே போய், ஜாமீன் கொடுக்கலாமா? கூடாதா? என்று அபிப்பிராயம் சொல்ல வேண்டிய நிலை!
என்ன செய்யப் போகின்றது சி.பி.ஐ.?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக