பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்: இரண்டாம் வகுப்பு போற வரைக்கும் எனக்கு படிப்பு மேல ஆர்வமே இல்ல; ரொம்பவும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தேன். அதனால, "டிகுரூஸ்' அப்படிங்கிற ஆங்கிலோ இந்தியன் ஆசிரியரை வீட்டுக்கே வரவழைச்சு டியூஷன் படிக்க வைச்சாங்க. அவங்க வரும்போது, நான் பக்கத்து வீடுகள்ல போய் ஒளிஞ்சுக்குவேன்.ஒரு வழியா, பள்ளியில் இரண்டாம் வகுப்பு எடுக்க வந்த அமுதா ஆசிரியர் தான், கணக்கு, ஆங்கிலப் பாடங்களை பதமா, அழகா மனசுல பதிய வைச்சார். பாடம் முடிந்ததும், என்னை ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்டு தான் வீட்டுக்கு அனுப்புவார்.ஏழாவது முதல், பிளஸ் 2 வரை, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயாவில் படிச்சேன். நான் படிச்ச பள்ளி, பாரம்பரியமானது. ஏழ்மை, நடுத்தரம், உயர்நிலை பாகுபாடெல்லாம் இல்லாம, எல்லா மாணவிகளையும் சமமா நடத்தி, மாணவிகளிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவாங்க.
கல்விக்கு இணையாக ஆன்மிக விஷயங்கள்லயும் மாணவிகளை ஈடுபட வச்சு, அவங்க மனசுல ஒழுக்க நெறிகளை பதிய வைப்பாங்க. கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற பண்டிகை நாட்களில், பள்ளியே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அப்ப நான் கர்நாடக இசை கத்துக்கிட்டு இருந்ததால், என்னை தான் அதிகமாக பாட வைப்பாங்க.நான் ஒரு பாடகியா வளருவதற்கு, அந்த பள்ளியும், அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் என் தோழிகள் தான் பெரிய உதவியாக இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக