செவ்வாய், 8 நவம்பர், 2011

பலஸ்தீனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதில் இலங்கைக்கு முக்கிய பங்கு இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!

பலஸ்தீனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதில் இலங்கைக்கு முக்கிய பங்கு இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 31ம் திகதி நடைபெற்ற யுனேஸ்கோ ஆண்டுக் கூட்டத்தில் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 107 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராக வாக்களித்ததுடன், 52 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.அமெரிக்கா, இஸ்ரேல், சுவீடன், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தியிருந்தன.

எனினும், பிரான்ஸ் வாக்கெடுப்பின் போது பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஆசிய ஆபிரிக்க நாடுகள் குறிப்பாக அணிசேரா நாடுகளும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க பலஸ்தீனத்தை யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டுமென தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக அமைச்சர் வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: