ஞாயிறு, 6 நவம்பர், 2011

வாழ்வை கேள்விக்குரியாக்கிய புலிகள்


ltte cadre051111
 மனித வாழ்வு பல பருவங்களை கொண்டிருப்பினும், அதில் சிறுவர் பருவமும், இளமைப்பருவமும் ஏனைய பருவங்களை விட அனைவராலும் விரும்பப்படும் பருவங்களாகும்.

எவ்வித மன சஞ்சலங்களும் இன்றி, பெற்றோரது அரவணைப்பில் ஆடிப் பாடி விளையாடி தமது சிறுவர் பருவத்தை மகிழ்ச்சியாக கழிப்பது அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுவர்களது உரிமையாகும். இதை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது.

அதேபோல் அனைவராலும் மறக்கமுடியாத பல குதூகல நிகழ்வுகளுடன் கூடியது, இளமைப் பருவமாகும். இளைஞர்கள், தமது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து, தனக்கென ஒரு சுயகௌரவத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிவுத்திறனை வளர்த்தபடி, மிகுந்த மகிழ்சியுடன் காலம் கழிப்பர். இம் மனித உரிமையையும் எவராலும் பறிக்கமுடியாது. ஆனால் தமது சுயலாபம் கருதி பலரது மனித உரிமைகள் உட்பட சிறுவர் உரிமைகளையும் பலாத்காரமாக பறித்துக் கொண்ட இயக்கமே தமிழீழ விடுதலைப்புலியினர்.

இவ் இயக்கமானது தமது இனத்தைச் சார்ந்த, எவ்வித பாவமும் அறியாத அப்பாவி இளைஞர் யுவதிகள் மட்டு மல்லாது, எவ்வித பாவமும் அறியாத பிஞ்சு இதயங்ளைக்கொண்ட சின்னஞ் சிறார்களையும் கூட தமது போராட்ட இயக்கத்தில் இணைத்து வந்துள்ளனர்.

பெற்றோரின் கதறல்களுக்கு மத்தியில், வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இழுத்துச் சென்று ஆயுதப் பயிற்சிகள் வழங்கி அவர்களை போர்முனைகளுக்கு அனுபுவதை வழக்கமாக கொண்டிருந்தது இவ் இயக்கம்.

அந்க வகையில் வலுக்கட்டாயத்தின் பெயரில் புலிகள் இயக்கத்தால் இழுத்துச்செல்லபட்டு, அவ் இயக்க உறுப்பினரால் சுடப்பட்டு, மயிரிழையில் உயிர்தப்பிய “விஸ்வானந்தம் நிரோஷா” தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை பற்றி கூறுகையில்.............

நான் பாடசாலையில் கல்விக் கற்றுக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில், விடுதலைப்புலி உறுப்பினர்கள், எனது வீட்டிற்கு வந்து, எனது விரும்பமின்றி கதறக்கதர என்னை அடித்து இழுத்துச் சென்றனர். உடனடியாக எனது தலைமயிரை வெட்டினர்.எமது விருப்பமின்றி பலவந்தமாக ஆயுதப்பயிற்சியளித்தனர். நான் பல முறை அங்கிலுந்து தப்பிக்க முயன்றேன்.

பின்னர் ஒரு நாள் எம்மை வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்லும் போது., எங்களை யுத்ததிற்கு அழைத்துச் செல்லப் போவதாகவும், எங்களுக்கு தண்டை வழங்கவுள்ளதாவும் மிரட்டினர். நான் நன்கு அச்சமடைந்தேன். அங்கிருந்த தப்பிக்க முயற்சித்தேன், அவ் வாகனம் நிறுத்தப்பட்ட வேளையில் அதிலிருந்து குதித்து ஓடினேன். அவ்வேளையில் அவர்களும் என்னை தொடர்ந்தனர், என்னால் ஓட முடிந்தளவு ஓடினேன், அவர்கள் என்னை தொடர்கிறார்களா என திரும்பி பார்க்கும் வேளையில் அவர்கள் என்னை துப்பாக்கியால் சுட்டனர். அச் சூடு எனது கன்னத்திக் ஊடாக சென்று தாடையின் ஊடாக வெளியேறியது. நான் அவ் விடத்திலே மயக்கமடைந்தேன்.

பின்னர் வைத்தியசாலையில் என்னை அடையாளம் காண முடியாத நிலையிலேயே இருந்தேன். அவ் வேளையிலும் கூட அவர்கள் தொடர்ச்சியாக என்னை அடிக்கடி வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். சுகமடைந்தவுடன் மீண்டும் அவர்களது இயக்கத்திற்கு என்னை அழைத்துச் செல்லவதற்காகவே.

எனவே அங்கிருந்தும் தப்பித்து எனது வீட்டை வந்தடைந்தேன். அவர்கள் மீண்டும் வீ்ட்றிக்கு வந்து என்னை தேடத் தொடங்கினர். எனது குடும்பமத்தாரின் உதவியைக் கொண்டு வீட்டினுள் யாரும் அடையாளம் காணாதவாரு பதுங்கு குழி (பங்கர்) ஒன்றை அமைத்து அதில் நாள் பூராக மறைந்து கொண்டு வாழ்ந்தேன் என தனக்கு நிகழ்ந்த கொடூர சம்பவத்தை கூறினார் “விஸ்வநாதன் நிரோஷா”.

நிரோஷா தற்போதும் கூட பூரண சுகமடையாது தொடர்ச்சியாக சிகிச்சசை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பலரது இளைஞர் மற்றும் சிறுவர்களது வாழ்கையை கேள்விக்குரியாக்கியுள்ள இப் பயங்கரவாதிகளால் பல பெறுமதிக்க உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன.

எனவே மனிதர்களுக்கு வழங்க வேண்டிய எந்தவித உரிமைகளையும் மதிக்காது, தமது பலாக்காரத்தின் மூலம் பல இளைஞர்களது வாழ்வை கேள்விகுரியாக்கி, சட்டத்தை கையிலெடுத்து செயற்பட்ட தமிழீழ விடுதலைபுலிகள் மேற்கொண்ட கொடூர செயற்பாடுகளை மறைக்கும் நோக்குடன், புலம்பெயர்நாடுகளில் வாழும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் தமது சுயலாபத்திற்காக நிதி சேகரிக்கும் நோக்குடன், அப்பாவி மக்களை பயங்கரவாத்தில் இருந்து காப்பாற்றி, மனிதாபிமான அடிப்படையில் அனைத்து வசதிகளையும் வழங்கி அவர்களது வாழ்கைத்தரத்தை மேம்படுத்த அர்பணிப்புடன் செயற்படும் இலங்கை அரசிற்கு எதிராக வழக்குத் தொடர முற்படும் கீழ்த்தரமானதாகவும், அறிவீனமானதாகவுமே கருத வேண்டும்.
நன்றி: விடிவு

கருத்துகள் இல்லை: