ஒன்லைன் விசா முறை நடைமுறைப்படுத்தல் திடீர் ரத்து!
கடந்த 30 ஆம் திகதி முதல் இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்படவிருந்த ஒன்லைன் விசா முறை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே இதனை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக அடுத்த வருடம் முதலே இந்த முறையினை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.இதேவேளை, குறிப்பிட்ட ஒன்லைன் விசா தொடர்பான இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் SIR LANKA என்பது SMRI LANKA எனக் காணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இலங்கை வரும் மற்றும் இலங்கையூடாக பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்காக இணையத் தளத்தினூடாக விசாவை பெற்றுக் கொடுப்பதற்கான புதிய முறைமையொன்றாக இலத்திரனியல் பயண (Electronic Travel Authorization -ETA) முறைமையொன்றை தாபித்து நடைமுறைப்படுத்துவதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து,. அந்த முறையினையினைக் கடந்த முப்பதாம் திகதி முதல் அமுல்படுத்தவிருந்தது தெரிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக