மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மோகன்தாஸ்.
இந்த தீர்ப்பு காரணமாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் அவருடன் தொடர்புடைய நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக