தமிழகத்தில் செங்கல்பட்டு, பூந்தமல்லி, சிறப்பு முகாம் அகதிகள் 14 பேர் விடுதலை!
தமிழகத்தில் செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பல் வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய அல்லது தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படுகிறவர்களை இங்கு பல ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. இப்படி அடைக்கப்பட்டிருப்பவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டன.கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும் அதை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 41 அகதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீதான வழக்குகள் நடத்தப்படாமல் அதே நேரம் விடுவிக்கப்படாமலும் இருந்தனர். அவர்களோ ஒன்றிலோ எங்களை விடுவிக்க வேண்டும் அல்லது எங்கள் மீதான வழக்குகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து பல வருங்களாக போராடி வந்தனர்.
இம்மாதம் துவக்கத்திலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர்.அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தி, வழக்குகள் முடிந்தவர்களை மட்டும் விடுவிப்பதாக உறுதி அளித்தனர்.இந்த நிலையில், வழக்குகள் முடிவடைந்த பின்னரும், இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவசண்முகராஜா, அந்த 15 பேரையும் விடுவிக்க போலீசுக்கு உத்தரவிட்டார்.அதன்படி, செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த டேனியல், தேவகரன், ஆனந்தகுமார், சந்திரகாந்தன், சுதர்சன், பிரசன்னா, தர்மராஜா, சுதாகர், கிரிதரன், நாராயணதாஸ், சங்கர், சீலன், சுதன், ஷேக்பரீத், சூரியகுமார் ஆகிய 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.அவர்களில் சிலர் தங்களுடைய உறவினர்கள் வசித்து வரும் இலங்கை அகதிகள் முகாமுக்கும், சிலர் தங்களது உறவினர் வீடுகளுக்கும் சென்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக