வெள்ளி, 3 ஜூன், 2011

சிறுமி மீது பாலியல் குற்றம் லண்டன் தமிழருக்கு சிறை


பால் வாங்கச் சென்ற சிறுமியை தாயாக்க முயன்ற இலங்கையருக்கு லண்டனில் கடூழிய சிறை!


பால் வாங்கச் சென்ற சிறுமியை தாயாக்க முயன்ற இலங்கையருக்கு லண்டனில் கடூழிய சிறை! சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு மூன்று வருடகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

அத்துடன் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் குறித்த இலங்கையர் நாடு கடத்தப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த 47 வயதான கௌரிதரன் மார்க்கண்டு என்பவரே இவ்வாறு சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார்.

குறித்த நபர் இருந்த வர்த்தக நிலையத்திற்கு பால் வாங்கச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த இவர் முயற்சித்துள்ளார்.

தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை உணர்ந்த சிறுமி தனது கையடக்கத் தொலைபேசி மூலம் தாயாருக்கு தகவல் வழங்க முற்பட்டபோது குறித்த இலங்கைத் தமிழர் சிறுமியின் கையடக்கத் தொலைபேசியை செயலிழக்கச் செய்துள்ளார்.

இந்தவேளையில் குறித்த இடத்திற்குச் சென்ற மற்றுமொருவர் சிறுமியை மீட்டுள்ளார். பின்னர் வர்த்தக நிலையத்தில் நடந்தவற்றை தாய்க்கு சிறுமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் உடனே மார்க்கண்டை கைது செய்து பின் நீதிமன்றில் நிறுத்தினர். எனினும் தன்மீதான குற்றச்சாட்டை மார்க்கண்டு முதலில் நீதிமன்றில் நிராகரித்தார்.

மரபணு பரிசோதனை மூலம் இவர் குற்றம் புரிந்துள்ளமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் இவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்ட


கருத்துகள் இல்லை: