வியாழன், 2 ஜூன், 2011

உண்ணாவிரத சதியில் ராம் தேவும் அன்ன ஹசரேயும் பிஜேபியின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றம்

கடந்த காலங்களில் ராமரையும் ராமர் கோவிலையும் வைத்து வெறுப்பு அரசியல் நடாத்தி ஆட்சியை பிடித்த பாரதீய ஜனதா கட்சி தற்போது ராம் தேவ் மற்றும் அன்ன ஹசாரே கூட்டணி மூலம் புதிய பார்முலாவில் ஆட்சியை பிடிக்க சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிராக கச்சகட்டும் அன்ன ஹசாரே என்பவர் சொந்த வாழ்வில் தனது தூய்மையை முதலில் நிருபிக்கட்டும். 
சாமியார் ராம்தேவ் ஒரு பக்க வியாபாரி. இரு fanatic தீவிர வாதிகளும் பிஜேபி யின் துருப்பு சீட்டாக செயல்படுகிறார்கள்.
இவர்களின் நோக்கத்தில் எள்ளளவும் தூய்மை இருப்பதாக தெரியவில்லை. 
மத்திய அரசின் வழ வழ கொழ கொழ தன்மை வழக்கம் போல நன்றாகவே தெரிகிறது.
இந்திய அரசு கந்தாகர் விமானக் கடத்தல் விவகாரத்திலாகட்டும் வேறு அயோத்தி விவகாரத்திலாகட்டும் எப்பொழுதுமே முட்டாள் தனமாக சிந்திப்பதை தனது கொள்கையாக வைத்திருகிறதோ என்று சந்தேகம் வருமளவு இந்த காவி பயங்கர வாதிகளிடம் மிகவும் மென்மையாக நடக்கிறது.
இது என்னவோ பாம்புக்கு பால் வார்ப்பது போல் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: