ராணா படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு உடல்நலமில்லை. முதலில் இசபெல்லாவிலும், தற்போது ராமச்சந்திராவிலும் சிகிச்சை பெறுகிறார். இந்தியாவில் பலருக்கும் குறிப்பாக பாமரருக்கு வரும் நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஒரு விபத்துப் போல வந்திருக்கிறது.
அவ்வளவுதான். ஊடகங்களில் எத்தனை எத்தனை செய்திகள், பிரேக்கிங் நியூஸ்கள், வதந்திகள், கிசுகிசுக்கள்…..? இந்த பியூஸ் போன நபருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
இசபெல்லாவில் இரகசியத்தை பாதுகாக்க முடியவில்லை என்று ராமச்சந்திராவில் ஒப்பந்தம் போட்டு சேர்த்தார்களாம். இரட்டை இலைக்கே ஓட்டுப்போட்டிருந்தாலும், தள்ளாத வயதில் எதிர்கால அரசியல் நலன்கருதி பார்க்க வந்த கருணாநிதியை ரஜினி மகள் பேசி அனுப்பிவிட்டாராம். மோடியையும், சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்த ரஜினி தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று கருணாநிதிக்கு கடுப்பாம்.
நாட்டில் காலரா, மலேரியா முதலான தொற்று நோய்கள் வந்து மருந்து மாத்திரைகள் கூட இல்லாமல் சாகும் மக்களைக் கொண்ட நாட்டில் ஒரு நட்சத்திர நடிகனுக்கு அபரிதமான முக்கியத்துவம். ரஜினி இட்டிலி சாப்பிட்டதையும், வாழைத்தண்டு இரசம் குடித்ததையும் தமிழக ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் பிரைம் டைம் செய்திகளாக்குகின்றன. ரசிகர்கள் யாகம் வளர்த்ததையும், அலகு குத்துவதையும் சொல்லி உசுப்பி விடுகின்றன.
பாபா படத்தின் போது கழுத்தில் போடும் டாலரைக்கூட டிசைன் செய்து அதற்கும் விலை வைத்து, மொத்தமாக சுருட்டலாம் என்று பிளான் போட்ட அக்மார்க் அவாள் மாமி லதா தினசரி வந்து ரஜினி நன்றாக நலமாக இருப்பதால் தமிழகம் எரிமலை போன்று வெடிக்க வேண்டியதில்லை என்று கூறுவதையெல்லாம் எப்படி சகிப்பது?
ரஜினி சற்று குணமான நிலையில் அமெரிக்காவிற்கு மேல்சிகிச்சைக்காக பயணம் செய்யப் போவதாக ஜூனியர் விகடன் குறிப்பிடுகிறது. ரஜினி சுத்தமான தேசபக்தர் என்பதால் இந்திய மருத்துவமனையின் சிகிச்சைகளை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு செல்வதை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு நிமோனியாக காய்ச்சலுக்கே அமெரிக்கா என்றால் யூரின் டிரபிள் என்றால் சிங்கப்பூர் செல்வார்களோ?
ரஜினி உடல்நிலை குறித்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அதாவது இட்லி, வடை சாப்பிட்டது, ரசம் குடித்தது, குடும்பத்தோடு அரட்டை அடித்தது, ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்தது எல்லாம் ஊடகங்களில் வரவேண்டுமென்று எந்த தமிழன் அழுதான்? இவை வரவில்லை என்றால் யார் குடியும் முழுகாது என்று தெரிந்தும் ஊடகங்கள் திட்டமிட்டே இதை காயத்ரி மந்திரம் போல வேளா வேளைக்கு ஒதுகின்றன.
தமிழகத்தில் செய்தி ஊடகங்களின் தரம் என்ன என்பதற்கு இந்த ரஜினி அக்கப்போரே சான்று. எனில் மக்களின் வாழ்வாதாரமான செய்திகள் என்றுமே இவற்றில் வரப்போவதில்லை என்பதற்கும் இதுவே ஆதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக