செவ்வாய், 31 மே, 2011

தயாநிதி மாறனுக்கு ஒரு நீதி ராசாவுக்கு ஒரு நீதியா தயாநிதி மாறனுக்கு ஒரு நீதி ராசாவுக்கு ஒரு நீதியா? ஆதிக்க சக்திகளின் அராஜகம்

அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா. 2ஜி  அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, 2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.

இந்த நடைமுறை, ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதால், தயாநிதி கையில் இத்துறை இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி சுழன்றடிக்கிறது .
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு; தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான நடைமுறைகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளி யிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 மார்ச் 5-ம் தேதி , 8 ஏரியாக்களுக்கு யுஏஎஸ்எல் எனப்படும் உரிமம் கோரி சிவா குரூப் நிறுவனத்தின் சிவசங்கரனின்  டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) விண்ணப்பித்தது. அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார்.  விண்ணப்பிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஏழு ஏரியாக்களுக்கான உரிமங்களுக்கு கையெழுத்தானது. மத்தியபிரதேசம் மாநிலத்திற்குக் கோரப்பட்டிருந்த உரிமம் மட்டும் கையெழுத்தாகவில்லை.
2004 ஏப்ரல் 21-ந் தேதியன்று உ.பி. (கிழக்கு), உ.பி. (மேற்கு) பகுதிகளில் உரிமம் கோரி டிஷ்நெட் விண் ணப்பித்தது. இந்நிலையில், டிஷ்நெட் நிறுவனத்தின் மதிப்பு, அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து 2004 மே 5-ந் தேதியன்று கேள்வி எழுப்பிய தொலைத் தொடர்புத்துறை, மத்தியபிரதேசத்திற்கான உரிமத் தையும், மற்ற பகுதிகளுக்காக போடப்பட்ட விண்ணப்பத்தையும் நிறுத்தி வைத்தது.
தே.ஜ.கூ. ஆட்சிக்குப்பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 2004 மே  26-ந் தேதியன்று தயாநிதி மாறன் பொறுப் பேற்றார். ஜூன் மாதத்தில், தொலைத் தொடர்புத்துறை கேள்விகளுக்கு விரிவான பதிலைத் தாக்கல் செய்தது டிஷ்நெட் நிறுவனம். இதனைப் பரிசீலித்த தொலைத் தொடர்புத்துறை செயலாளர், உ.பி. மேற்கு- கிழக்கு பகுதிகளுக்கான விண்ணப்பம் குறித்தும் ம.பி. மாநிலத்திற்கான லைசென்ஸ் வழங்குவதற்கான அவகாசம் குறித்தும் ஒப்புதல் தெரிவிக்கும் திட்டத்தை முன் வைத்தார். இந்த திட்டம், அமைச்சர் தயாநிதி மாறன் முன்வைக்கப்பட்டது.

அவருடைய செயலாளர், 2004 மார்ச் 24 அன்று டிஷ்நெட் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் ஈக்விட்டி குறித்து விளக்கம் கேட்டு நோட்  போட்டார். அதற்கும் டிஷ்நெட் விரிவான விளக்கம் கொடுத்தது. இந்நிலையில், 2005 மார்ச் 1ஆம் நாள் ஹரியானா, கேரளா, கொல்கத்தா, பஞ்சாப் மாநிலங்களில் உரிமம் கேட்டு டிஷ்நெட் விண்ணப்பித்தது.

அதே மாதம் 30ஆம் நாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் ஒரு நோட் போட்டார். அதில், தொலைத்தொடர்பு அமைச்சருடன் (தயாநிதி) ஆலோ சித்ததில், துறை சார்பிலான நோட் டீஸ்கள், அறி வுறுத்தல் கடிதங் களுக்கு உரிய பதிலளிக்கக் கோரி விண்ணப்பதார ரின் ஃபைல்கள் அனைத்தும் திருப்பி அளிக்கப் படுகின்றன என்று தெரிவித்திருந் தார். இதன்பின், எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் டிஷ்நெட் நிறுவனத்தின் ஃபைல் கள்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் அவை தொலைத் தொடர்புத்துறையின் பல பகுதிகளிலும் சுற்றியது.
அதே நேரத்தில், தொலைத்தொடர்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 2005ஆம் ஆண்டில் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட மேக்ஸிஸ் குரூப் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்காக சிவா குரூப் சிவசங்கரனை அணுகியது.  அதே ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, உரிமங்கள் வழங்குவதற்கான புதிய வழி காட்டுதல்களை தொலைத்தொடர்புத்துறை அறிவித்தது. இதன்மூலம் ஏற்கனவே இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
2005-ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ்  நிறுவனம் ஏற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, ஏற்கனவே நிலுவையில் இருந்த  விண்ணப்பங்கள் தொலைத் தொடர்புத்துறையில் அவசரமாக பரிசீலிக்கப்ப்டடன.

அதன்பின் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகா ராஷ்ட்ரா, டெல்லி,  ஆந்திரா, குஜராத் என மாநிலங் களுக்கும் உரிமம் கோரியது ஏர்செல். இரண்டாண்டுகளாக நிலுவையில் இருந்த பீகார் , ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களுக்கான உரிமங்கள்  ஏர்செல்லுக்கு வழங்கப் பட்டன.

மேக்ஸிஸ் நிறுவனத்தின் முதலாளி டி.அனந்த கிருஷ்ணன், தனது நிறுவனத்தின் முத லீட்டாளர்களுக்கு 2006 மார்ச்  மாதம்  ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஏர் செல்லின் 70% ஈக் விட்டியை வாங்கு வதற்காக சிவசங்கரனின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முழுமையடைந்து விட்டது எனத் தெரி வித்தார்.

இதன்பின் , டிஷ்நெட் (ஏர்செல்) நிறுவனத்தின் சார்பில் நிலுவையி லிருந்த விண்ணப்பங்கள்  மற்றும் உரிமங்கள் தொடர்பாக வேகவேகமாக தொலைத் தொடர்புத்துறையில் பரிசீலனைகள் நடந்தன. அதற்குரிய விளக்கங்களையும் விவரங்களையும் டிஷ்நெட் நிறுவனம் விறுவிறுவென அளித்தது.

2006ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று, மத்தியபிரதேசம் உள்பட 14  சர்க்கிள்களுக்கான  உரிமங்கள் வழங்குவது தொடர்பான கடிதம் அளிக்கப்பட்டு, பதினைந்தே நாட்களில் அந்த 14 சர்க்கிளுக்குமான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1,399.47 கோடி ரூபாயை செலுத்தி உரிமங் களைப் பெற்ற ஏர்செல் நிறுவனம், இந்தியாவின் முன்னணி செல்போன் தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.&

இந்த உரிமங்கள் வழங்கப்பட்ட நான்கே மாதங்களில், அதாவது 2007 பிப்ரவரி மாதத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஏசியா என்டர்டெய்ன்மெண்ட் ஹோல்டிங் லிமிட்டெட் நிறுவனம், கலாநிதி மாறனின் சன் குரூப் நிறுவனத்தின் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் (சன் டி.டி.ஹெச்)டில் சுமார் 600 கோடி ரூபாயை ஈக்விட்டியாக முதலீடு (150 மில்லியன் டாலர்) செய்கிறது.

பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியும் இதற்கு ஒப்புதல் அளிக்கிறது.

இதன்பின் 2008 பிப்ரவரி மாதம் முதல் ஜூலை 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மாறன் குடும்பத்தினரின் சன் குழுமத்தின் மற்றொரு அங்கமான சன் எஃப்.எம் ரேடியோ நெட்வொர்க்கின் சவுத் ஏசியா எஃப். எம். லிமிட்டெட்டில் 100 கோடி ரூபாயை மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இரண்டாண்டுகளாக உரிமம் கிடைக்காமல் ஏர்செல் நிறுவனம் போராடிக்கொண்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகளில் மேக்ஸிஸ் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் உடனடியாக 14 சர்க்கிள்களுக்கு உரிமம் வழங்கப் பட்டதும், இவை நடைபெற்று சில மாதங்களில் அந்த நிறுவனம், சன் குழுமத்தில் 700 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதும் இயல்பாக நடந்தவையா என கேள்வி எழுப்பியுள்ளது தெஹல்கா பத்திரிகை.

ஸ்பெக்ட்ரம் இழப்பீடு என சி.ஏ.ஜி. மதிப்பிட்டுள்ள தொகையின் அடிப்படையில், மேக்ஸிஸின் ஏர்செல் நிறு வனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றைக்கான மதிப்பு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய்.

ஆனால், அந்த நிறு வனம் 1,399 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தி, இந்த  அலைக்கற்றை ஒதுக் கீட்டைப் பெற்றுள்ளது. சுமார் 20ஆயிரத்து 600 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிவசங்கரன் நிறுவனத்திடம் ஏர்செல் இருந்தபோது, அதற்கான உரிமங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்திய தயாநிதி மாறன், அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் வந்ததும் உரிமங்களை வேகமாக வழங்கியது குறித்த புகார்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனும்  தனது அறிக்கையில், தயாநிதியின் இந்த தாமதத் தந்திரம் குறித்து குறிப்பிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கருத்துகளை தயாநிதி மாறனின் துறை கேட்கவில்லை என்கிறது அறிக்கை. குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸின் தலையீடு இல்லாமல், ஸ்பெக்ட்ரம் கட்டணம் தொடர்பாக  தொலைத் தொடர்புத்துறையே முடிவெடுக்க வேண்டும் என பிரதமருக்கு தயாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

2001ஆம் ஆண்டு கட்டணத்தின்படி, 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார் என்ற சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சிறையில் இருக்கிறார். இத்தகைய ஒதுக்கீட்டுக்கான முன்னு தாரணத்தை உருவாக்கியவர் தயாநிதி மாறன்தான் என்கின்றனர் தொலைத்தொடர்புத்துறையினர்.

முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்வான் டெலிகாம் நிறு வனத்துக்கு குறைந்த கட்டணத்தில் அலைக் கற்றைகள்  ஒதுக்கப்பட்டன என்பது ராசா மீதான குற்றச்சாட்டு. அதேபோலத்தான், ஏர்செல் நிறுவனத்துக்கும் குறைந்த  கட்டணத்தில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஸ்வான் நிறுவனத்திற்கு குறைந்த கட்டணத்திற்கு அலைக்கற்றை ஒதுக்கியதற்கு பிரதிபலனாகத்தான் கலைஞர் டி.விக்கு 200 கோடி ரூபாய் முதலீடாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அது கடன் தொகை அல்ல என்றும் சி.பி.ஐ. தெரிவித் துள்ளது.

கலைஞர் டி.வி. யின் ஷேர் மதிப்போ, நிதி ஆதாரமோ 200 கோடி ரூபாய் கடன் பெறும் அளவுக்கு இல் லை என்றும் தெரி வித்துள்ளது. சன் டி.டிஹெச் நிறுவனத் தில் 600 கோடி ரூபாயை ஈக்விட்டி முதலீடாக்கி யுள்ளது, ஏர்செல் லுக்காக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுள்ள மேக்ஸிஸ் நிறுவனம். சன் டி.டி.ஹெச்சின் 2007-2008 ஆண்டறிக்கையில் 73.27 கோடி ரூபாய் நட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்டத்தில் செல்லும் நிறுவனத்தில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பது பற்றி சி.பி.ஐ. விசாரிக்கக்கூடும் என்கிறது தெஹல்கா பத்திரிகை. மேலும், கலைஞர் டி.வியில் ராசாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ எந்த பங்கும் இல்லை.

ஆனால், சன் டி.டி.ஹெச்சில் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கும் அவரது மனைவி காவேரிக்கும் 80% பங்குகள் உள்ளன என்றும் தெஹல்கா குறிப்பிடுகிறது.

ஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ஆ.ராசா  மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதி விஷயத்திலும் பொருந்துகிறது; என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில், மே 26-ந் தேதி வியாழனன்று டெல்லியில் சோனியாகாந்தியை அவருடைய வீட்டில் சந்தித்தார் தயாநிதி மாறன்.


ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் 2ஜி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவிருக்கும் நிலை யில், சோனியாவை தயாநிதி மாறன் சந் தித்தது டெல்லி முதல் சென்னை வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தமிழக காங் கிரசின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத்தும் உடனிருந்ததால், இது தி.மு.க தலைமையின் அனுமதியுடன் நடந்த சந்திப்பா அல்லது தயாநிதியின் தனிப்பட்ட முறையிலான சந்திப்பா என்ற விவாதமும் தலைநகரத்தில் கிளம்பியுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கலாகவிருக்கும் நிலையில், 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக தன்  மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்வதற்காக  தயாநிதி மேற்கொண்ட சரணாகதி படலம்தான் சோனியா வுடனான அவரது விசிட் என்கிறது டெல்லி வட்டாரம்.

கருத்துகள் இல்லை: