திங்கள், 30 மே, 2011

தி.மு.க., ஆட்சி ஊழலால் தான் காங்கிரசுக்கு தோல்வி

திண்டுக்கல்:""ஆளும்கட்சியினரின் ஊழலால் தான், காங்., கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தலைமையிடம் வலியுறுத்துவோம்'', என மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜா பேசினார். திண்டுக்கல்லில் இளைஞர் காங்., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்
பேசியதாவது: சட்டசபை தேர்தலில், எங்கள் கருத்துக்கள் டில்லியில் எடுபடவில்லை. இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று, வெற்றி பெற்று
இருப்போம். கட்சியில் தற்போது ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வரும் காலங்களில் 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்க வேண்டும்.

தேர்தலில் காங்., தோல்விக்கு ஆளும் கட்சி ஊழல் தான் அடித்தளமாக இருந்தது. முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அமைச்சர் முதல் வார்டுகளில் உள்ளவர்களின் ஊழலால் தான், காங்., பலிகடா ஆக்கப்பட்டது. இனி வரும் தேர்தலில்களில் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் காங்., தனித்து போட்டியிடும்.
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும், என்றார். சித்தன் எம்.பி., லோக்சபா தொகுதி தலைவர் வெங்கடேஷ் கார்த்திக், தொகுதி பொது செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Pugal - covai,இந்தியா
2011-05-30 04:19:57 IST Report Abuse
காங்கிரஸ்காரனே காங்கிரசுக்கு ஒட்டு போடவில்லை என்பதுதான் உண்மை. எந்த ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத துணை முதல்வரும் அடுத்த முதல்வர் என எதிர்பார்த்தவரே கஷ்டப்பட்டு ஜெயிக்கும் அளவிற்கு நிலை மோசமாக இருந்தது தமிழ்நாட்டில். மிரட்டி 63 இடங்கள் வாங்கிவிட்டு, எதிலுமே எல்லோரும் ஏற்கும் வேட்பாளரை நிற்கவைக்க முடியாமல் திணறிய காங்கிரஸ் பேசவே கூடாது. காங்கிரசை கழற்றிவிட்டு தி மு க வே 119 + 63 இடங்களில் நின்றிருந்தால் ஈசியாக 90 இடங்களில் ஜெயித்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை: