சிவகங்கை : ""இலவச அரிசி திட்டத்தினை எவ்வித விழாவும் நடத்தாமல், கடைகளில் வழக்கம் போல் வினியோகம் செய்யவேண்டும்,'' என, அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வர் ஜெ., பொறுப்பேற்றவுடன், ரேஷன் கார்டிற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, இத்திட்டம் இன்று முதல் (ஜூன் 1) தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் துவக்கப்படுகிறது. இதன் மூலம் பச்சை நிற கார்டு வைத்துள்ள 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இவர்களுக்கு யூனிட் அடிப்படையில் குறைந்தது 12 கிலோ முதல் அதிக பட்சம் 20 கிலோ வரை வழங்கப்படும்.
விழாவிற்கு தடை:இன்று துவக்கப்படும் இத்திட்டத்தை, சென்னையில் மட்டுமே முதல்வர் ஜெ., துவக்கி வைப்பார். மற்றபடி எந்த மாவட்டத்திலும், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று, விழா நடத்தி அரிசியை வினியோகம் செய்யக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர் வழக்கம் போல், அரிசி வினியோகம் செய்வது போல், செய்தால் போதும். இத்திட்டம் முறைப்படி நடக்கிறதா என கலெக்டர், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில்,"" அரிசி வழங்கும் திட்டத்தை விழாவாக நடத்தவோ, அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை வைத்து துவக்கி வைக்கவோ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கம் போல் விற்பனை நடக்கும்,'' என்றார்.
அரிசி விவகாரத்தில் எப்படி பார்த்தாலும் நல்ல பெயர் வரப்போவது என்னவோ கலைஞருக்குத்தான் . மக்களை சோம்பேறியாக்கும் திட்டம் என்று மேட்டுக்குடிகளின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிவிட்டு திடீரென்று கலைஞரின் பாதையை பின்பற்றினால் மனசாட்சி கொஞ்சம் உறுத்தத்தானே செய்யும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக