வியாழன், 2 ஜூன், 2011

பன்னீர்செல்வத்தின் தம்பி தற்போது கமிஷன் கேட்ட விவகாரம்

நம்பர், "2'வின் தம்பி களமிறங்கினார்...! ""உலக வங்கி கிளை யை, சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்குதுங்க...!'' என, பேசியபடியே பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.

""அப்படியா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

""ஆமாங்க... 2004ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி இருந்தப்ப, உலக வங்கியின் கிளையை தமிழகத்துல ஆரம்பிக்க முயற்சி எடுத்தாங்க... ஆனா, அது நடக்கறதுக்குள்ள ஆட்சி மாறிருச்சுங்க... அடுத்து வந்த தி.மு.க., ஆட்சி, உலக வங்கி கிளை அமைக்கும் திட்டத்தை கிடப்புல போட்டிருச்சு... இப்ப, அ.தி.மு.க., ஆட்சி வந்துட்டதால, அவங்க மீண்டும் முயற்சி எடுத்திருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""எல்லா துறைக்கும் ஒரே இடத்துல வேலை நடந்துடுதாம் பா...'' என அடுத்த விவகாரத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

""ஆச்சரியமா இருக்கேங்க... இதெங்க நடக்குது...'' என அதிசயித்தார் அந்தோணிசாமி.

""கடந்த ஆட்சியில, ஒவ்வொரு துறையிலயும் வேலையை முடிச்சுக் கொடுக்கறதுக்கு, ஒவ்வொருத்தர் இருந்தாங்க பா... இந்த ஆட்சியில அந்த மாதிரி யாரும் இல்லையேங்கிற குறையைப் போக்க, நம்பர், "2' மந்திரியின் உடன்பிறப்பு களமிறங்கியிருக்காரு பா...

""கடந்த முறை ஆட்சியில இருந்தபோதே இவர் மேல ஏகப்பட்ட புகார்கள் வந்தது... இப்போ, தனது ரெண்டாவது இன்னிங்சை துவக்கியிருக்காராம் பா... "எந்தத் துறையில, யாருக்கு, எது வேணும்னாலும், என்கிட்ட வாங்க'ன்னு சொல்றாராம்... இதுவரை இருந்த இடம் தெரியாம இருந்த அவரோட வீடு, இப்போ, "ஜேஜே'ன்னு இருக்காம்...'' என முடித்தார் அன்வர்பாய்.

""ஆளுங்கட்சிக்காரங்க  கேகமிஷன் கேட்ட விவகாரம், பெரிய பிரச்னையாயிட்டு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

""இந்த ஆட்சியில அப்படி எல்லாம் செஞ்சா, நடவடிக்கை கடுமையா இருக்குமேங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""உண்மை தான்... ஆனா, சில இடங்கள்ல கட்சிக்காரங்க, வரம்பை மீறி செயல்பட்டுட்டு இருக்காவ... விழுப்புரம் மாவட்டம், தென் பெண்ணை ஆற்றுல பேரங்கியூர், மாரங்கியூர் குவாரிகள்ல, பொதுப்பணித் துறை மணல் அள்ள அனுமதிச்சிருக்காவ... அங்க, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., ஆட்கள், ஒன்றிய செயலர் தலைமையில போய் பிரச்னை செஞ்சிருக்காவவே...

""லாரிக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்தா தான், வண்டியை எடுக்க விடுவோம்ன்னு சொல்லிருக்காவ... இதனால, ரெண்டு தரப்புக்கும் வாக்குவாதம் அதிகமாகி, பெரிய தகராறா மாறிருக்கு... தகவல் தெரிஞ்சு, போலீசார் போயிருக்காவ...

""பிரச்னைக்கு காரணமே, தென் பெண்ணை ஆற்று செயற்பொறியாளர் விடுமுறையில போனது தானாம்... உதவி செயற்பொறியாளரும், குவாரி விவகாரத்தை கண்டுக்காம விட்டுட்டார்... ஆரம்பத்திலேயே, இதை எல்லாம் தடுக்கலேன்னா, மணல் விலையை கட்டுப்படுத்த முடியாம போயிடும்ன்னு சொல்றாவ வே...'' எனக் கூறிவிட்டு, அண்ணாச்சி கிளம்ப, மற்ற பெரியவர்களும் நடையைக் கட்டினர்.

கருத்துகள் இல்லை: