2ஜி வழக்கில் அனில் அம்பானி, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா, கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பெயரை 2ஜி வழக்கில் சேர்க்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக, டெல்லியைச் சேர்ந்த பத்திகையாளர் எம். ஃபர்குவான், காசியாபாத்தைச் சேர்ந்த தர்மேந்தர் பாண்டே ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இன்று இந்த மனு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
இதில்,2ஜி வழக்கில் அனில் அம்பானி, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா, கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பெயரை 2ஜி வழக்கில் சேர்க்கக் கோரி தொடரப்பட்ட மனுவை நீதிபதி நிராகரிப்பதாக அறிவித்தார்.
மேலும், மனுதாரர்கள் இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார். இத்தகைய மூன்றாம் நபர்களின் மனுக்களால் நீதிமன்றத்தின் மதிப்புமிக்க காலநேரம் வீணாவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மூன்று நாட்களுக்குள் இத் தொகையே செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிடில் வாரன்ட் பிரபிக்கபடும் எனவும் நீதிபதி உத்தரவுவிட்டார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக