கேபிள் டி.வி. அரசுடமை: விநியோகஸ்தர் சங்கம் பாராட்டு
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் கடுமையான போட்டிகளை சந்தித்து திரைப்பட வசூல் களம் பெறும் இழப்பை பெற்றது. அதில் முக்கியமான ஒன்று கேபிள் டி.வி. வழியாக உரிமை இல்லாத படங்களை, அதுவும் புதிய படங்களை அந்த ஊர் திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட்டு ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சில ஊர்களில் திரை யங்குகளில் படங்கள் திரையிடாத நிலையில் சட்டத்திற்கு எதிராக முறையற்ற வழியில் எங்கள் திரைபடங்களை சில கேபிள் ஆப்ரேட்டர்கள் திரையிட்டு எங்களை பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாக்கினர்.
இதை எதிர்த்து நாங்கள் போராடி, போராடி தோற்ற நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் “கேபிள் டி.வி. அரசுடமையாக்கம்” என்ற அறிவிப்பு எங்கள் இதயத்தை நெகிழ வைக்கிறது. தமிழக மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இத் திட்டம் அவர்களுக்கு பெறும் மகிழ்வை கொடுக்கும். வரம்பு மீறி மற்றவன் உழைப்பில் சுகம் கண்ட சில அத்துமீறல் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு இது சரியான கடிவாளம். இத்திட்டம் தமிழ் திரையுலகின் புனர்வாழ்விற்கு ஒரு பிள்ளையார் சுழி’’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக