செவ்வாய், 21 ஜூன், 2011

வன்னியில் இருந்த இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு தென்னிலங்கை செல்ல முயன்ற லொறி வவுனியாவில் சிக்கியது!


வன்னிப் பிரதேசத்திலிருந்து பெருமளவு இரும்பு பொருட்களை ஏற்றி வந்த ஐந்து லொறிகளை வவுனியா பொலிஸார் நேற்று திங்கள் அதிகாலை கண்டு பிடித்து ள்ளனர். மக்கள் மீள்குடியேறிய கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதியிலிருந்து இந்த இரும்பு பொருட்கள் தெற்கே கொண்டு வரப்பட்டபோது பொலிஸாரின் சோதனையின்போது வவுனியாவில் சிக்கியுள்ளது.

லொறிகளில் பயணம் செய்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவருகிறது. அனுமதியின்றி இரும்பு பொருட்கள் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்ல முடியாது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொது மக்களினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்டு வந்த வாகனங்களுடைய உதிரி பாகங்கள் இவையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. லொறியிலிருந்து இரும்புகள் இறக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறதென பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை: