சமச்சீர் கல்வி குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்ததற்கு கண்டனம்: 300 மாணவர்கள் கைது
சமச்சீர் கல்வி ஆய்வு குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் நிறுத்தும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நûபெற்றது. சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கனகராஜ், தமிழ்நாட்டில் முழுமையான சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கல்வியாளர்களுக்கு பதிலாக தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்து உள்ளார்கள். அதனை வாபஸ் வாங்க வேண்டும். நடுநிலையான கல்வியாளர்களை நிபுணர் குழுவில் நியமிக்க வேண்டும். ரவிராஜ பாண்டியன் அறிவித்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் அதிகப்படியாக இருக்கிறது. இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக