சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணத்தில் பெரும்பகுதி
காங்கிரசாருடையது : மேனகா காந்தி
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி காங்கிரசாருடையது என்று மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.>
அவர் மேலும்,‘’போபர்ஸ் விவகாரத்தில் பெறப்பட்ட பணம் இத்தாலி வங்கியில் போடப்பட்டுள்ளது. காங்கிரசார் பணம் என்பதாலேயே கறுப்புப் பணத்தை மீட்க தயக்கம் காட்டுகிறது அரசு.
கறுப்புப் பணத்தை மீட்பதில் அனைத்து தரப்பும் குரல் கொடுப்பது அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் இது குறித்து,’’சி.பி.ஐ. அமைப்பை காங்கிரஸ் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இந்த அமைப்பை தனது லாக்கரில் காங்கிரஸ் பூட்டி வைத்துள்ளது. தேவைப்படும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. ஏவி விடப்படுகிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரே மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நடந்து கொள்ளும் விதம் அநாகரீகமானது.
சுவிஸ் வங்கியில் ஏராளமான இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆவர்.
எனவேதான் கருப்பு பணத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அடக்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது. லோக்பால் மசோதா குறித்து அடுத்த மாதம் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதை நான் ஏற்றுக் கொள்வேன்’’ என்று கூறியுள்ளார்.
இதைத்தானே நாங்கள் முன்பே கூறினோம்' காங்கிரஸ் அப்பெண்ணின் பண மதிப்பே கிட்டத்தட்ட' முப்பத்து ஆராஜிரம் கோடி இந்தியா ரூபாய்கள் என்று' மற்றும் காங்கிரஸ் மற்ற பிரமுகர்களின் பண மதிப்பே' இதனை விடக் கூட' மேலும் சி பி ஜ மட்டுமல்ல' இந்திய முக்கிய அதிகார மட்டமேல்லாம் காங்கிரஸ் புல்லிகளிடமே''' இதனால் காங்கிரசை இந்தியாவில் ஆறும் ஒன்றும் பண்ணமுடியாது' என்பது மட்டும் உண்மை' இவர்களின் பணம் சுவிஸ் பாங்கில் மட்டுமல்ல' இத்தாலி உட்பட உலகம் முழுதும் உள்ள முக்கிய வங்கிகளில் இருக்கின்றது' அதனை ஆரும் இலகுவில் பெற முடியாது'''' நீங்கள் இந்திராவின் மருமகள்.இந்தியாவின் குடிமகள் .அப்படி இருத்தும் உங்களையும் உங்கள் மகனையும் ஓரம் கட்டிவிட்டு காங்கிரஸ் காரங்கள் வெட்கமில்லாமல் யாருக்கு பினால் நிற்கிறாங்கள்.நீங்கள் சொல்வதுபோல் சுவிஸ் வங்கி பணமோ?????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக